வெங்காய தூள் பஜ்ஜி | பிரெட் பஜ்ஜி (bread bajji recipe in tamil) | Tasty & Simple snacks | Onion Bajji & Bread Bajji by AMMA SAMAYAL

வெங்காயதூள் பஜ்ஜி:
குழந்தைகளுக்கு வீட்டிலேயே செய்து அசத்துங்கள். கடைகளில் சாப்பிடுவதை விட நீங்களே செய்து கொடுங்கள். ஆரோக்கியம் முக்கியம்.

இப்போது கடலைமாவை வைத்து வெங்காய பஜ்ஜி செய்வது எப்படி என்று பார்க்கலாம். ரொம்ப சிம்பிள். கண்டிப்பா வீட்டில் செஞ்சி பாருங்க.

வெங்காயதூள் பஜ்ஜி
தேவையான பொருட்கள்:
கடலை மாவு 3 கப்
அரிசி மாவு 1/2 கப்
தனி மிளகாய்பொடி 2 ஸ்பூன்
சீரகப்பொடி 1/2 ஸ்பூன்
பெருங்காயப்பொடி 1/2 டீஸ்பூன்
உப்பு தேவைக்கு
பெரிய வெங்காயம் 3
காஷ்மீர்சில்லி பொடி 1 ஸ்பூன்(தேவைப்பட்டால்)
எண்ணெய் தேவைக்கு

செய்முறை:
முதலில் வெங்காயம் நீளவாக்கில் கட் பண்ணிக் கொள்ளவும். பின் கடலைமாவு, அரிசிமாவு, உப்பு, 2 ஸ்பூன் எண்ணெய், மிளகாய் தூள், பெருங்காயம், சீரகத்தூள், காஷ்மீர் மிளகாய்தூள் சேர்த்துக் கலக்கவும்.

பின் கட் பண்ணிய வெங்காயம் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்துக்கலக்கவும். வெங்காயம் மேல் மாவு இருக்கனும். வேறு வாணலியில் எண்ணெய்விட்டு சூடு ஆனதும் மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உதிர்த்தது போல்போடவும்.

நன்கு சிவந்து வந்ததும் எடுத்து விடவும். மழைக்கு ஏற்ற ஸ்நாக்ஸ்.

வெங்காயத்தூள் பஜ்ஜி ரெடி.🙏😊நன்றி. மகிழ்ச்சி.




பிரெட் பஜ்ஜி (bread bajji recipe in tamil):
கடலை மாவை வைத்து செய்வது பிரட் பஜ்ஜி செய்வது எப்படி என்று பார்க்கலாம். ரொம்ப சிம்பிள். ரொம்ப டேஸ்ட்டி. கண்டிப்பா try பண்ணுங்க. ஈவினிங் ஸ்னாக்ஸ்க்கு ரொம்ப அருமையா இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவாங்க.
தேவையான பொருட்கள்:
பிரெட் 12
போண்டா மிக்ஸ் மாவு தேவைக்கு
உப்பு ருசிக்கு
தண்ணீர் தேவைக்கு
எண்ணெய் பொரிப்பதற்கு

செய்முறை:
தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.பிரெட்டை 2 துண்டுகளாக கட் செய்யவும்.

பௌலில் பஜ்ஜி மிக்ஸ் மாவு, தண்ணீர், உப்பு சேர்த்து கட்டியில்லாமல் நன்கு கரைத்துக் கொள்ளவும்.

அடுப்பை மிதமான தீயில் வைத்து கடாயில் எண்ணெய் விட்டு நன்கு சூடாக்கவும்.

கரைத்த மாவில் பிரெட் துண்டை போட்டு நன்கு எல்லா பக்கமும், படும்படி, தோய்த்துக் கொள்ளவும்.

எண்ணெய் நன்கு சூடானதும், அடுப்பை சிறு தீயில் வைத்து, தோய்த்த பிரெட் துண்டுகளை எண்ணெயில் போட்டு, நன்கு பொரிக்கவும்.

பொரித்ததை எண்ணெய் வடிய வைக்கும் கூடையில் எடுக்கவும்.

இப்போது, சுவையான, சுலபமான, *பிரெட் பஜ்ஜி* தயார். செய்து பார்த்து என்ஜாய் செய்யவும், குளிர் காலத்திற்கு ஏற்ற ஈவ்னிங் சிற்றுண்டி.


Post a Comment

Previous Post Next Post