முருங்கை கீரை || வேர்க்கடலை பிரட்டல்
சிறு கீரை தேங்காய்பால் கூட்டு (Greens with coconut milk gravy) | 2 வகை கீரை பொரியல் ரெசிபி | by AMMA SAMAYAL

முருங்கை கீரை || வேர்க்கடலை பிரட்டல்:
முருங்கை இலையில், இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்துக்கள் நிறைந்துள்ளன. முருங்கை இலையின் காம்பை ரசம் வைத்து சாப்பிட்டால், உடல் வலிகள் குறையும். ரத்தச் சோகை வராமல் தடுக்கின்றது. வேர்க்கடலை மூளையின் வளர்ச்சிக்கும், இதயத்தை பாதுகாப்பதற்கும், பெரிதும் உதவுகின்றது.
தேவையான பொருட்கள்:
முருங்கை கீரை 1 கட்டு
ம.தூள் 3/4 டீ ஸ்பூன்
உப்பு ருசிக்கு

வறுக்க:
பச்சரிசி 2 ஸ்பூன்
வேர்க்கடலை 1 ஸ்பூன்
பூண்டு 4 பெரிய பல்
காஷ்மீரி மிளகாய் 4
தேங்காய் துண்டுகள் 1 டேபிள் ஸ்பூன்

தாளிக்க:
கடுகு 2 டீ ஸ்பூன்
உ.பருப்பு 1 டீ ஸ்பூன்
க.பருப்பு 1 டீ ஸ்பூன்
சீரகம் 1 டீ ஸ்பூன்
மிளகாய் 2
தே.எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை 1 ஆர்க்கு
தண்ணீர் தெளித்து வேக விட

செய்முறை:
முருங்கைக் கீரையை சுத்தம் செய்து, சற்று பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

அடுப்பை மிதமான தீயில் வைத்து வெறும் கடாயில், அரிசி, வேர்க்கடலை, பூண்டு, தேங்காய், மிளகாயை சேர்த்து கருகாமல் நன்கு வறுத்து தட்டில் ஆற விடவும்.

ஆறினதும், மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

அடுப்பை சிறு தீயில் வைத்து, கடாயில், 1 டேபிள் ஸ்பூன், தே.எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு, வெடித்ததும், க.பருப்பு, உ.பருப்பு, சீரகம், மிளகாய், கறிவேப்பிலை தாளித்ததும், ம.தூள், போடவும்.

பிறகு, கீரை, உப்பு, சிறிது தண்ணீர் தெளித்து வதங்கியதும், அரைத்த பொடியை போடவும்.

பிறகு ஒன்று சேர கிளறி, நன்கு பிரட்டி யதும், அடுப்பை நிறுத்தி விடவும்.

பிறகு பௌலுக்கு மாற்றவும்.

இப்போது, ஹெல்தியான, சுவையான, சுலபமான,*முருங்கை கீரை, வேர்க்கடலை, பிரட்டல்* தயார்.செய்து பார்த்து என்ஜாய் செய்யவும்.

குறிப்பு:- இது சூடான சாதத்தில் நெய் விட்டு பிசைந்து சாப்பிடலாம். சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதத்திற்கு மிகவும் ஆப்ட்டாக இருக்கும். தே.எண்ணெய் சேர்ப்பதால் கூடுதல் சுவை கிடைக்கும்.



சிறு கீரை தேங்காய்பால் கூட்டு (Greens with coconut milk gravy):
தினமும் ஒரு கீரை என நம் உணவில் சேர்த்துக் கொண்டால் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அந்த வகையில் இன்று நான் சிறு கீரை,சத்தான தேங்காய் பால் வைத்து ஒரு கூட்டு முயற்சி செய்தேன்.
மிகவும் அருமையான சுவையில் இருந்ததால் உங்களிடம் பகிந்துள்ளேன்.இன்று உங்களுக்காக தேசிய கீரை தினம் அன்று ஒரு புது வித கீரை சமையல்.
தேவையான பொருட்கள்:
1 கட்டு சிறு கீரை
தேங்காய் பால் 2 கப்
நறுக்கிய வெங்காயம் 1/2 கப்
பச்சை மிளகாய் 4
கல் உப்பு தேவையான அளவு
தாளிக்க:
தேங்காய் எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன்
உளுந்து பருப்பு 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:
கீரை தேங்காய்பால் கூட்டு செய்ய தேவையான பொருட்கள் எடுத்து தயாராக வைக்கவும்.

கீரையை தண்ணீரில் இரண்டு,மூன்று முறை நன்கு கழுவி எடுத்து, பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

தேங்காய் பால் எடுத்து தயாராக வைக்கவும்.

கடாயை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் கடுகு, உளுந்து பருப்பு சேர்த்து பொரிந்ததும்,நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய்,வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

அத்துடன் நறுக்கி வைத்துள்ள கீரையை சேர்த்து நன்கு கலந்து விடவும்.

பின்னர் கல் உப்பு சேர்த்து கலந்து விடவும். அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் தண்ணீர் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வேக வைக்கவும்.

கீரையில் உள்ள தண்ணீர் வற்றும் போது தயாராக வைத்துள்ள தேங்காய் பால் சேர்த்து கலந்து, கொஞ்சம் சூடானதும் இறக்கி விடவும்.

குறிப்பு: கெட்டியான முதல் தேங்காய் பால் மட்டும் தான் ஊற வேண்டும். தேங்காய் பால் ஊற்றி கொதிக்க விடக்கூடாது.

தயாரான கீரை கூட்டை எடுத்து ஒரு பௌலில் சேர்க்கவும். இப்போது மிக மிக சுவையான கீரை தேங்காய்பால் கூட்டு தயார்.

சத்துக்கள் நிறைந்த,மசாலா பொருட்களை சேர்க்காத, மிகவும் சுவையான கீரை தேங்காய்பால் கூட்டு சுவைக்கத்தயார்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் இந்த கீரை தேங்காய்பால் கூட்டு எல்லா சாதங்களுடனும் சேர்த்து சுவைக்கலாம்.





Post a Comment

Previous Post Next Post