COOKING TIPS

  • சப்பாத்தி மாவு கழுவும் போது, அதில் வேகவைத்து தோள் உரித்த உருளைக்கிழகை சேர்த்து பிசைந்து, சிறிது காச்சிய பாலை ஊற்றி பிசைந்தாள் சப்பாத்தி மெதுவாக வரும்.
  • சப்பாத்தி செய்து எண்ணெய் வடிகட்டியில் போட்டு மூடி வைத்தால் அடியில் உள்ள சப்பாத்தி வேர்த்து ஈரமாகாமல் இருக்கும்.
  • சர்க்கரைப் பொங்கல் செய்யும்போது அரை கப் தேங்காய் பால் ஊற்றிக் கிளறி இறக்கினால் பொங்கல் மிகவும் சுவையாக இருக்கும்.
  • வெங்காய பக்கோடா செய்ய மாவு பிசையும் போது வறுத்த நிலக்கடலையை பொடி செய்து மாவுடன் சேர்த்து பிசையவும். இதனால் பக்கோடா மொறு மொறுவென்று ருசியாக இருக்கும்.
  • தேங்காய்த் துருவல் மீதியானால் அதை லேசாக வதக்கி சிறிது உப்பு சேர்த்து வைத்தால் மறுநாள் சமையலுக்குப் பயன் படுத்திக் கொள்ளலாம்.
  • ரவா தோசை செய்யும் போது இரண்டு ஸ்பூன் கடலை மாவு சேர்த்து செய்தால் தோசை நன்கு சிவந்து மொறு மொறுவென்றிருக்கும்.
  • பாயாசத்திற்கு திராட்சைக்கு பதிலாக பேரிச்சம் பழத்தை பொடியாக நறுக்கி வைத்து நெய்யில் பொரித்து போட்டால் சுவையாக இருக்கும்.
  • தோசை மாவு பொங்கல் போன்றவற்றில் சீரகத்தை கைகளால் சிறிது தேய்த்துப் போட்டால் சுவையுடன் மணமாக இருக்கும்.
  • பாகற்காயுடன் உப்பு, மஞ்சள்தூள், வெல்லம், எலுமிச்சை சாறு ஆகியவை சேர்த்து கலந்து அரை மணி நேரம் வைத்திருந்தால் கசப்பு காணாமல் போய்விடும்.
  • இட்லி பொடி தயாரிக்கும் போது ஒரு ஸ்பூன் மல்லியை வறுத்து மற்ற சாமான்களுடன் பொடி செய்தால் இட்லி பொடி வாசனையாக இருக்கும்.
  • தேங்காய் பர்பி செய்யும் போது சிறிது முந்திரி பருப்பு பாதாம் பருப்பு இரண்டையும் ஊற வைத்து தேங்காயுடன் அரைத்து பின்னர் பர்பி செய்தால் பர்பி நன்றாக இருப்பதோடு வில்லை போடும்போது தேங்காயும் உதிராமல் இருக்கும்.
  • உளுந்துவடை செய்யும் போது மாவுடன் வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து கலந்து வடை செய்தால் வடை எண்ணெய் குடிக்காமல் மொறு மொறுவென்று ருசியாக இருக்கும்.
  • பூரிக்கு மாவு பிசையும் போது தண்ணீருக்கு பதிலாக ஒரு கப் பாலைச் சேர்த்து பிசைந்தால் பூரி ருசியாக இருப்பதோடு மிருதுவாகவும் இருக்கும்.
  • ரவா உருண்டை செய்யும்போது சிறி தளவு பால் பவுடரையும் சேர்த்து செய்யவும். அளவும், சுவையும் கூடும்.
  • குலாப் ஜாமூன் செய்யும் போது ப்ரெஷ் கிரீம் சோத்தால் ஜாமூன் மிருதுவாக வரும், சுவையும் ககூடும்.
  • பாதுஷா செய்யும்போது மாவில் கொஞ்சம் தயிர் விட்டுப் பிசைந்தால் பாதுஷா மிகவும் மிருது வாக இருக்கும்.
  • சரியாக லட்டுகள் பிடிக்க வாலையா? சிறிதளவு கோவாவை பூந்தியில் சூட்டோடு கலந்து பிடித்தால் லட்டு அருமையாக வரும். பால் சுவையுடன் லட்டு மேலும் ருசியாக இருக்கும்.
  • ரவா கேசரி, சேமியா கேசரி அவல் கேசரி செய்யும் போது வெள்ளரி விதை சேர்த்தால் வித்தியாசமான சுவையோடு இருக்கும்.
  • பஜ்ஜி மாவை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்து விட்டு பஜ்ஜி செய்தால், மிருதுவாகவும் உப்பியும் வரும்.
  • மிக்சரில், மிள காய்த் தூளுடன் சிறிது மிளகுத் தூள் சேர்த்தால் சுவையும். மணமும் கூடும்.



  • முறுக்கு, தட்டை செய்யும் போது மாவுடன் தேங்காய் எண்ணெய் விட்டு பிசைந்து செய்தால், வேறு எண்ணெய்பில் கட்டாலும் தேங்காய் எண்ணெய்யில் செய்தது போல வாசனையாக இருக்கும்.
  • உளுந்து வடை செய்யும்போது மாவில் சிறிதளவு சேமியாவைத்தூள் செய்து போட்டு வடை செய்தால், மொறுமொறுப்பாக இருக்கும்.
  • ஜாங்கிரி செய்யும் போது நீரில் ஊற வைத்த உளுத்தம் பருப்பை விழுதாக அரைத்து, அத்துடன் ஒரு சுப் உளுந்து விழுதுக்கு ஒரு டேபிள் ஸ்பூன் அரிசி மாவைக் கலக்கவும். அப்படி செய்தால் நெய்யில் ஜாங்கிரி பிழியும் போது முழுதாக வரும். சுவையும் கூடும்.
  • போளி தட்டும் போது, பூரணத்தை உருட்டி வைத்த பின், அதை வடைபோலத் தட்டையாகத் தட்டி வைத்தால், மாவால் முடும் போது பூரணத்தின் மேல்புறமும். கீழ்புறமும் மாவு ஈமமாக இருக்கும்.
  • கேசரி, பால்கோவா, தேங்காய் பர்பி போன்ற இனிப்புகளை நான்ஸ்டிக்பாத்திரத் தில் செய்தால் அடிபிடிக்காமல் எளிதாகக் கிளறலாம்.
  • பொட்டுக்கடலைப் பொடியில் செய்யும் இனிப்புகள், சுவையாக இருப்பதுடன், உடனடியாகவும் செய்து விடலாம். நெய்யும், சர்க்கரையும் குறைவாக சேர்க்கவும்.
  • ரவா லட்டுக்கு பாகு காய்ச்சும் போது அதில் சிறிது எலுமிச்சைச் சாறு சேர்த்தால் பாகு முருகாமல் வரும்.
  • Post a Comment

    Previous Post Next Post