சிக்கன் கிரேவி (கேரளா ஸ்டைல்) | ചിക്കൻ ഗ്രേവി (കേരള സ്റ്റൈൽ) | Kerala Style Chicken Curry Recipe by AMMA SAMAYAL

சிக்கன் கிரேவி (கேரளா ஸ்டைல்) | ചിക്കൻ ഗ്രേവി (കേരള സ്റ്റൈൽ) | Kerala Style Chicken Curry Recipe:
நீங்கள் கேரளா ரெசிபிக்களை விரும்பி சாப்பிடுபவரா? அதுவும் சிக்கன் ரெசிபிக்களை விரும்பி சாப்பிடுவீர்களா? அப்படியானால் உங்கள் வீட்டில் கேரளா ஸ்டைல் சிக்கன் கிரேவியை செய்து சாப்பிடுங்கள்.

உங்களுக்கு கேரளா ஸ்டைல் சிக்கன் கிரேவி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

கீழே கேரளா ஸ்டைல் சிக்கன் கிரேவியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

விழுது அரைக்க தேவையான பொருள்:
மிளகு 1 ts.
சோம்பு 1 ts.
அண்ணாச்சி பூ 1
கிராம்பு 4 Nos.
பட்டை 2 Nos.
ஏலக்காய் 2 Nos.
துருவிய தேங்காய் 1/2 கப்பு
எண்ணெய் 2 tbsp
கருவேப்பில்லை
மஞ்சள் தூள் 1 ts
மல்லி தூள் 4 tbsp
உப்பு
சின்ன வெங்காயம் 3 Nos.

குழம்பு செய்ய தேவையான பொருள்:
பெரிய வெங்காயம் 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 tbsp.
பச்சை மிளகாய் 2
சிக்கன் 1/2 kg.
தக்காளி 2
கொத்தமல்லி இலை


கேரளா ஸ்டைல் சிக்கன் கிரேவி | ചിക്കൻ ഗ്രേവി (കേരള സ്റ്റൈൽ):
செய்முறை :
ஒரு வாணலில் 1 ts மிளகு, 1 ts சோம்பு,

4 கிராம்பு, 2 பட்டை, 2 ஏலக்காய்,

1 அண்ணாச்சி பூ, 1/2 கப்பு துருவிய தேங்காய் சிறிது எண்ணெய் மற்றும் கொஞ்சம் கருவேப்பில்லை சேர்த்து வதக்கவும்.

தேங்காய் பொன்னிறம் ஆனதும், மிக்ஸியில் போட்டு அதுகூட,

1 ts மஞ்சள் தூள், 2 tbsp மிளகாய் தூள், 4 tbsp மல்லி தூள், சிறிது உப்பு, 3 சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்து எடுத்து கொள்ளவும்

ஒரு வாணலில் 2 tbsp எண்ணெய் ஊற்றி, வெட்டிய ஒரு பெரிய வெங்காயம், அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.

1 tbsp இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும்.

இதுகூட, 2 பச்சை மிளகாய் இரண்டாக வெட்டி சேர்த்து கொள்ளவும்

அடுப்பை மிதமான தீயில் வைத்து, அதில் 2 தக்காளி சேர்த்து வதக்கவும்.

தக்காளி வதங்கியவுடன் மிக்ஸியில் அரைத்து வைத்த விழுதை சேர்த்து வதக்கவும்.

பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

கழுவி வைத்த 1/2 கிலோ சிக்கனை சேர்த்து மூடி போட்டு மிதமான தீயில் 20 நிமிடம் வேகவிடவும்.

சிக்கன் நன்கு வெந்தவுடன் கொத்தமல்லி போட்டு இறக்கவும்

சுவையான கேரளா ஸ்டைல் சிக்கன் குழம்பு தயார் ....!


Post a Comment

Previous Post Next Post