கோவில் Style புளியோதரை:
புளியோதரை பொடி செய்ய தேவையான பொருள் | |
---|---|
மிளகு | 1 tsp |
கடலை பருப்பு | 1 tsp |
உளுந்து | 1 tsp |
மல்லி விதை | 1 tsp |
கடுகு | 1 tsp |
வெந்தயம் | 1/4 tsp |
எள்ளு | 1 tsp. |
சீரகம் | 1 tsp. |
வரமிளகாய் | 05 Nos. |
கறிவேப்பிலை | 1 கைப்பிடி |
புளியோதரை குழம்பு செய்ய தேவையான பொருள்: | |
---|---|
நல்லண்ணெய் | 1 tbsp |
விளக்கெண்ணெய் | 1 tbsp |
கடுகு | 1 tsp |
வெந்தயம் | 1/4 tsb |
உளுந்து | 1 tsb |
கடலை பருப்பு | 1 tsb |
வேர்க்கடலை பருப்பு | 1 கைப்பிடி |
காஞ்ச மிளகாய் | 6 Nos. |
பெருங்காய பொடி | 1 tsb |
மஞ்சள் தூள் | 1/2 tbsp |
மிளகாய் தூள் | 1/4 tbsp |
கறிவேப்பிலை | 1 கைப்பிடி |
உப்பு | |
புளி | onion size |
செய்முறை:
1/4 kg அரிசியை குக்கரில் விட்டு எடுத்து கொள்ளவும். சூடான சாதத்தில் நல்லெண்ணை விட்டு கிளறி தனியாக எடுத்துவைத்து கொள்க..
புளியோதரை பொடி செய்ய:
எண்ணெய் ஊற்றாமல் வாணலில், 1 tsp மிளகு, 1 tsp கடலை பருப்பு, 1 tsp உளுந்து, 1 tsp மல்லி விதை, 1 tsp கடுகு, 1/4 tsp வெந்தயம், 1 tsp எள்ளு, 1 tsp சீரகம், 5 வரமிளகாய், ஒருபிடி கருவேப்பிலை சேர்த்து மிதமான தீயில் வறுத்து மிக்ஸியில் போட்டு பொடியாக்கி தனியாக எடுத்து கொள்ளவும்
புளி குழம்பு செய்ய :
புளியை (1 வெங்காய அளவு) சூடு தண்ணீரில் ஊற வைத்து கெட்டியாக கரைத்து எடுத்து கொள்ளவும்
1 tbsp நல்லெண்ணெய், 1 tbsp விளக்கெண்ணெய் ஊற்றி சூடானதும், 1 tsp கடுகு சேர்க்கவும். கடுகு பொரிந்தவுடன், அடுப்பை மிதமான தீயில் வைத்து 1 tsp உளுந்து, 1 tsp கடலை பருப்பு போட்டு வறுக்கவும்.
பின் ஒரு கைப்பிடி வேர்க்கடலை பருப்பு, 6 காஞ்ச மிளகாய் கிள்ளி போடவும், பின் ஒரு கைப்பிடி கறிவேப்பிலை போட்டு வதக்கி,
அதனுடன் பெருங்காய பொடி கரைசல் (1 tsb பெருங்காய பொடியில் 1 tsb தண்ணீர் விட்டு கரைத்து கொள்க) ஊற்றவும்.
1/2 tbsp மஞ்சள் தூள், 1/4 tbsp மிளகாய் பொடி போட்டு கிளறவும்.
பின், எடுத்து வைத்த கெட்டியான புளி கரைசலை சேர்த்து, அதனுடன் தேவையான அளவு உப்பு போட்டு சிறிது நேரம் கொதிக்க விடவும்.
5 நிமிடம் மிதமான தீயில் வைத்து குழம்பு கெட்டியானதும், 1 tbsp அரைத்து வைத்த புளியோதரை பொடியை சேர்க்கவும்.
பொடி சேர்ந்தவுடன் எண்ணெய் தெறிக்கும், குழம்பு கெட்டியாகும்.
அடுப்பை கம்மியாக்கி 3 நிமிடம் விடவும்.
எண்ணெய் பிரிந்து மேலே வந்ததும், அடுப்பில் இருந்து இறக்கி, சிறிது கறிவேப்பிலை தூவி விடவும்.
தாளிப்பு செய்ய (Not Necessary) :
சிறிது எண்ணெய் ஊற்றி ஒரு கைப்பிடி வேர்க்கடலை, கொஞ்சம் கருவேப்பிலை போட்டு இறக்கவும் . (கறிவேப்பிலை பச்சை நிறம் போகாமல் லேசாக வறுத்துக்கொள்ளவும்)
Final Touch :
எடுத்து வைத்த ஆறிய சாதத்தில், கொஞ்சம் கறிவேப்பிலை, பொறித்த தாளிப்பு, செய்து வைத்த புளி குழம்பில் தேவையான அளவு எடுத்து சாதத்தில் போட்டு நன்கு கிளறிவிடவும்.
ருசியான மணக்க மணக்க கோவில் புளி சாதம் தயார்
SPONSORSHIP:
This Content Sponsored by Buymote Shopping app
BuyMote E-Shopping Application is One of the Online Shopping App
Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)
Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8
Sponsor Content:
#buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication
This Content Sponsored by Buymote Shopping app
BuyMote E-Shopping Application is One of the Online Shopping App
Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)
Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8
Sponsor Content:
#buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication
Tags
சாதம் வகைகள்