சுண்ட வத்தல் குழம்பு

சுண்ட வத்தல் குழம்பு
செய்ய தேவையான பொருள்
வெந்தயம் 1/4 tsp
வரமிளகாய் 3
கடுகு 1 tsp
சீரகம் 1/2 tsp
பூண்டு 12 - 15 Nos.
வெங்காயம் 10 - 15 Nos.
தக்காளி 3 Nos.
மஞ்சள் தூள் 1/4 tsp.
மிளகாய் தூள் 1 1/2 tbsp.
மல்லி தூள் 2 tbsp.
புளி கரைசல் lemon size
வெல்லம் சிறிய துண்டு(optional)
கறிவேப்பிலை
வத்தல் 1 கைப்பிடி

சுண்ட வத்தல் குழம்பு :

செய்முறை :

3 tbsp எண்ணெய் ஊற்றி சூடானதும், 1/4 tsp வெந்தயம், 3 Nos. வரமிளகாய், 1 tsp கடுகு சேர்க்கவும், கடுகு பொறிந்தவுடன் 1/2 tsp சீரகம், கறிவேப்பிலை, 12-15 Nos. பூண்டு,
10-15 Nos. வெங்காயம், உப்பு தேவையான அளவு சேர்த்து வதக்கவும்.

3 தக்காளி அரைச்சி ஊற்றி நன்கு வதக்கவும்.

1/4 tbsp மஞ்சள் தூள், 1 1/2 tbsp மிளகாய் தூள், 2 tbsp மல்லி தூள், புளி கரைசல் (lemon size) சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி மூடி போட்டு மூடி 10 நிமிடம் எண்ணெய் பிரிந்து வரும்வரை விடவும்

எண்ணெய் குழம்பில் இருந்து பிரிந்து வந்தவுடன் 2 சிறிய துண்டு வெல்லம் சேர்த்து இறக்கவும்

2 tsp எண்ணெய் ஊற்றி, 1 கைப்பிடி வத்தல் சேர்த்து வறுத்து குழம்புடன் சேர்க்கவும்

சுவையான வத்தல் குழம்பு தயார்

Post a Comment

Previous Post Next Post