VEGETABLE BIRIYANI:
VEG - BIRIYANI செய்ய தேவையான பொருள் | |
---|---|
பாசுமதி அரிசி | 2 கப் |
பெரிய வெங்காயம் | 2 |
தக்காளி | 2 |
கேரட் | 2 |
பீன்ஸ் | 8 - 10 |
காலிஃப்ளவர் | 1/4 |
உருளைக்கிழங்கு | 1 |
கப் பச்சை பட்டாணி | ¼ |
தயிர் | ¼ கப் |
பச்சை மிளகாய் | 2 |
பூண்டு பல் | 3 |
இஞ்சி துண்டு | 1 |
மஞ்சள் தூள் | ½ tbsp |
கரம் மசாலா | 1 tbsp |
மல்லி தூள் | 2 tbsp |
பிரியாணி இலை | 2 |
பட்டை | 1 துண்டு |
ஏலக்காய் | 3 |
கிராம்பு | 3 |
நட்சத்திர பூ | 1 |
மிளகாய் தூள் | தேவையான அளவு |
நெய் | தேவையான அளவு |
உப்பு | தேவையான அளவு |
கொத்தமல்லி | சிறிதளவு |
புதினா | சிறிதளவு |
வெஜிடபிள் பிரியாணி செய்முறை :
முதலில் வெங்காயம், தக்காளி, கேரட், பீன்ஸ், காலிபிளவர், பச்சை மிளகாய், கருவேப்பிலை, மற்றும் கொத்தமல்லியை நறுக்கி, பச்சை பட்டாணியை உரித்து வைத்து, இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி, மற்றும் பாசுமதி அரிசியை நன்கு சுத்தம் செய்து கழுவி அதை சுமார் 45 நிமிடத்தில் இருந்து ஒரு மணி நேரம் வரை ஊற விடவும்.
அடுத்து ஒரு குக்கரை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் 2 மேஜைக்கரண்டி அளவு நெய்யை ஊற்றி அதை உருக விடவும்.
நெய் உருகியதும் அதில் பிரியாணி இலை, கிராம்பு, ஏலக்காய், நட்சத்திர பூ, மற்றும் பட்டையை போட்டு அதை சுமார் அரை நிமிடம் வரை வதக்கவும்.
அரை நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், பச்சை மிளகாய், மற்றும் சிறிதளவு உப்பு போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.
வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நாம் செய்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை போட்டு அதை நன்கு கலந்து விட்டு இஞ்சி பூண்டு பேஸ்ட்டின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும்.
இஞ்சி பூண்டு பேஸ்ட்டின் பச்சை வாசம் போனதும் அதில் மஞ்சள் தூள், மல்லி தூள், கரம் மசாலா, மற்றும் அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூளை போட்டு அதை நன்கு கலந்து விடவும்.
பின்பு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை போட்டு அதை நன்கு கலந்து விட்டு சுமார் 2 நிமிடம் வரை வேக விடவும்.
2 நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர், மற்றும் பச்சை பட்டாணியை போட்டு அதை நன்கு கலந்து விட்டு சுமார் 3 லிருந்து 5 நிமிடம் வரை வேக விடவும்.
5 நிமிடத்திற்கு பிறகு அதில் கால் கப் அளவு தயிரை சேர்த்து அதை சுமார் ஒரு நிமிடம் வரை நன்கு கிளறி விடவும்.
ஒரு நிமிடத்திற்கு பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை நன்கு கலந்து விடவும். (சுமார் ரெண்டரை கப்பில்லிருந்து மூன்று கப் வரை தண்ணீர் சேர்த்தால் சரியாக இருக்கும்.)
பின்னர் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லி மற்றும் புதினாவை போட்டு உப்பை சரி பார்த்து தேவைப்பட்டால் உப்பு சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.
பிறகு நாம் ஊற வைத்திருக்கும் பாசுமதி அரிசியை மீண்டும் ஒரு முறை நன்கு கழுவி அதில் சேர்த்து அதை பக்குவமாக அரிசி உடைந்து விடாமல் கிளறி விடவும்.
பின்பு அதில் ஒரு மூடி போட்டு ஆவி வந்ததும் விசிலை போட்டு சுமார் ஒரு விசில் வரும் வரை அதை வேக விடவும். (பாசுமதி அரிசி எளிதாக வேகும் தன்மை கொண்டதால் கவனமாக இருக்க வேண்டும்.)
ஒரு விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு குக்கரை அப்படியே சுமார் 15 லிருந்து 20 நிமிடம் வரை வைக்கவும்.
20 நிமிடத்திற்கு பிறகு மூடியை திறந்து வெஜிடபிள் பிரியாணியை எடுத்து ஒரு தட்டில் வைத்து ஆனியன் ரைத்தா உடன் அதை சுட சுட பரிமாறவும்.
இப்பொழுது உங்கள் சூடான மற்றும் அட்டகாசமாக இருக்கும் வெஜிடபிள் பிரியாணி தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.
Special Tips :
தயிர்: பிரியாணிக்கு சிறிது தயிர் சேர்ப்பதால், சுவையும் மிருதுவும் கிடைக்கும். தக்காளி மற்றும் தயிர் சேர்த்தால் மாசமான சுவை வரும்.முந்திரி, கிஸ்மிஸ் சேர்க்கவும்: ப்ரியாணியில் முந்திரி, கிஸ்மிஸ் சேர்த்தால் அதை ஒரு ரிச்சான உணவாக மாற்றலாம்.
சிறு பச்சை மிளகாய்: பச்சை மிளகாய் சேர்த்தால், பிரியாணியின் காரத்தையும் மணத்தையும் மெருகேற்றும்.
This Content Sponsored by Genreviews.Online
Genreviews.online is One of the Review Portal Site
Website Link: https://genreviews.online/