Bread Roast Veg - வெஜ் பிரெட் ரோஸ்ட் || Veg Bread Roll Recipe - வெஜ் பிரெட் ரோல்

சுவையான ஸ்னாக்ஸ் (Snakes) ப்ரெட் வைத்து எப்படி செய்வது என்று பார்ப்போம் by AMMA SAMAYAL
Bread Roast Veg || வெஜ் பிரெட் ரோஸ்ட்:
சுவையான ஸ்னாக்ஸ் (Snakes) ப்ரெட் (Bread) வைத்து எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
பிரட் 1 பாக்கெட்
காரட் 2 No's
பெரிய வெங்காயம் 2 No's
பச்சை மிளகாய் 2 No's
குடமிளகாய் 1 No's
உப்பு தேவைக்கு
வெண்ணெய் தேவைக்கு
சமையல் எண்ணெய் தேவைக்கு
பீன்ஸ்காய் 10 No's
உருளைக் கிழங்கு வேகவைத்தது 2 No's
நெய் விருப்பப்பட்டால்

செய்முறை:
முதலில் தேவையான பொருட்களைக் சிறிதாகக்கட் பண்ணிக்கொள்ளவும். பின்ஒரு வாணலியை அடுப்பில் வைத்துதேவையான எண்ணெய்ஊற்றி முதலில் வெங்காயம் பச்சைமிளகாய் பின் காரட்,பீன்ஸ்காய், குடைமிளகாய் வதக்கவும்.

பின் தேவையான உப்புச்சேர்த்து கலந்து விடவும்.வேகவைத்த உருளைக் கிழங்கை சேர்த்து அதிலேயே மசித்து விடவும்.சிறிது மிளகுப்பொடி சேர்க்கலாம்or மிளகாய் பொடி விருப்பப்பட்டால் சேர்க்கலாம்.

சிறிது ஆற விடவும்.பின் பிரட்டில் தடவி மேலேஒரு பிரட்வைத்து அழுத்திவிடவும்.

பின் தோசை வாணலியை அடுப்பில்வைத்து வெண்ணெய்போட்டு பிரட்டை டோஸ்ட்பண்ணவும்.நெய்விருப்பப்பட்டால் சுற்றிவிடலாம்.

பிரட் veg டோஸ்ட்ரெடி.

🙏😊நன்றி. மகிழ்ச்சி. குழந்தைகளுக்கு பிடித்தது. Lunch பாக்ஸ்க்குக் கொடுத்துவிடலாம்.



Veg Bread Roll Recipe || பிரெட் ரோல்:
Bread வைத்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் விரும்பி சாப்பிடும் ஸ்னாக்ஸ் (snakes) ஆன Veg Bread Roll எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
ப்ரெட் 8 Slice
கேரட் பொடியாக கட் செய்தது 150 gm
பச்சைப்பட்டாணி வேக வைத்தது 100 gm
உருளைக்கிழங்கு வேக வைத்து மசித்தது 250 gm
பெரிய வெங்காயம் பொடியாக கட் செய்தது 100 gm
இஞ்சி பூண்டு விழுது 2 tspn
கரம் மசாலா தூள் 1 tspn
மிளகாய் தூள் 2 tspn
கொத்தமல்லித்தழை பொடியாக கட் செய்தது 4 tbsp
உப்பு தேவையான அளவு
எண்ணெய் தேவையான அளவு
முந்திரி உடைத்து வறுத்தது 8 No's
கார்ன் ஃப்ளார் மைதா மாவு 4 tbspn
மிளகுத்தூள் 1/2 tspn
ப்ரெட் க்ரம்ஸ் 1/2 கப்

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் கார்ன்ஃப்ளார், மைதா மாவு, உப்பு சிறிதளவு, மிளகுத்தூள் உடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கரைத்து வைக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து சிவக்க வதக்கவும். இதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். பின் இதனுடன் கரம்மசாலாத் தூள், மிளகாய் தூள், உப்பு சிறிதளவு சேர்த்து நன்கு வதக்கவும்.

இதில் வேக வைத்த கேரட், பச்சைப்பட்டாணி சேர்த்து வதக்கவும். இதில் முந்திரி, கொத்தமல்லித்தழை சேர்த்து வதக்கி, மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும். ஆற விடவும்.

ப்ரெட் ஸ்லைஸை பூரிக்கட்டை வைத்து தேய்த்து அதில் கேரட் கலவையை வைத்து உருட்டி வைக்கவும்.

இதை கார்ன்ஃப்ளார் கலவையில் தோய்த்து, ப்ரட் க்ரமஸில் புரட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

முருகலான சூப்பர் சுவையில் வெஜ் ப்ரெட் ரோல் ரெடி. சாஸுடன் சாப்பிடவும்.



Post a Comment

Previous Post Next Post