ஐயர் வீட்டு மோர் குழம்பு... ||

இனி நீங்களும் சுலபமாக செய்யலாம்.. ரெசிபி இதோ! Iyer Style Mor Kuzhambu | Now You Can Make It Easily Too! by AMMA SAMAYAL
ஐயர் வீட்டு மோர் குழம்பு... இனி நீங்களும் சுலபமாக செய்யலாம்.. ரெசிபி இதோ!
பொதுவாகவே ஐயர் வீட்டு ரெசிபிகளுக்கு மவுசு அதிகம் தான். உதரணமாக புளிக்குழம்பு, சாம்பார் சாதம், வத்தல் குழம்பு போன்றவை ஆகும். அந்த லிஸ்டில் மோர் குழம்பும் அடங்கும். இந்த குழம்பு சாப்பிடுவதற்கு சுவையாகவும் செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும் சரி வாங்க இப்போது இந்த கட்டுரையில் ஐயர் வீட்டு மோர் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
தயிர் 1 கப்
தேங்காய் 1/2 கப் (துருவியது)
பச்சை மிளகாய் 3
கடலைப்பருப்பு 1 ஸ்பூன்
(ஊறவைத்தது)
காய்ந்த மிளகாய் 3
சின்ன வெங்காயம் 3
இஞ்சி சிறிதளவு
வெள்ளரிக்காய் சின்ன துண்டு (நறுக்கியது)
சீரகம் 1/2 ஸ்பூன்
கடுகு 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
பெருங்காயத்தூள் 1/2 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு 1/2 ஸ்பூன்
உப்பு சுவைக்கு ஏற்ப
எண்ணெய் தேவையான அளவு

செய்முறை:
ஐயர் வீட்டு மோர் குழம்பு செய்ய முதலில், எடுத்து வைத்துள்ள கடலை பருப்பை சுமார் 20 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும்.

இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் நறுக்கி வைத்துள்ள வெள்ளரிக்காயை சேர்த்து வதக்கவும்.

இதனை அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் துருவி வைத்து தேங்காயம், சீரகம், சின்ன வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், ஊற வைத்த கடலை பருப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு மையாக அரைத்து தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது இதனை அடுப்பில் வெந்து கொண்டிருக்கும் வெள்ளரிக்கையுடன் சேர்க்கவும். இதனுடன் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

இப்போது எடுத்து வைத்துள்ள தயிருடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து, இதில் ஊற்றவும்.

இப்போது மீண்டும் ஒரு கடையை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், கருவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளிக்கவும்.

தாளித்த இதனை அடுப்பில் இருக்கும் வெந்து கொண்டிருக்கும் குழம்பில் உற்றவும் சிறிது நேரம் கழித்து அடுப்பை இறக்கவும். அவ்வளவுதான் அட்டகாசமான சுவையில் ஐயர் வீட்டு மோர் குழம்பு ரெடி.


Post a Comment

Previous Post Next Post