உருளைக்கிழங்கு பட்டாணி குருமா ||

Potato Peas Kurma Recipe in Tamil || Side Dish for Chapathi || Potato Kurma || Green Peas Kurma by AMMA SAMAYAL
உருளைக்கிழங்கு பட்டாணி குருமா
(potato peas kurma recipe in tamil) :
Potato Peas Kurma Recipe In Tamil : இன்று இரவு உங்கள் வீட்டில் பூரி அல்லது சப்பாத்தி செய்யப் போகிறீர்களா? அதற்கு ஒரு அட்டகாசமான சைடு டிஷ் செய்து சாப்பிட விரும்புகிறீர்களா? உங்கள் வீட்டில் உருளைக்கிழங்கும், பச்சை பட்டாணியும் இருக்கா?

உருளைக்கிழங்கு மற்றும் பட்டாணியை வைத்து குருமா செய்வது எப்படி என்று பார்ப்போம். உருளைக்கிழங்கை வேகவைத்து, துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

பட்டாணியை தனியாக வேக வைத்து, மசாலா தயாரித்து, உருளைக்கிழங்குடன் சேர்த்து குருமா தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்:
5 - நபர்
உருளை கிழங்கு 1/2 kg.
பட்டாணி 1/4 Spoon
பச்சை மிளகாய் 4 - 5 No.
இஞ்சி பூண்டு விழுது 1 spoon
சிறிய தக்காளி 1 No's
கடுகு உளுந்தம் பருப்பு 1 spoon
சீரகம் 1/4 spoon
கறிவேப்பிலை 1 கொத்து
உப்பு தேவையானஅளவு
பெரிய வெங்காயம் 1 No's
எண்ணெய் 6 spoon
மஞ்சள் தூள் 1/4 spoon

செய்முறை:
நேரம் : 30 நிமிடங்கள்

முதலில் அடுப்பில் ஒரு குக்கர் வைத்து அதில் உருளைக்கிழங்கை தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து நான்கு ஐந்து விசில் விட்டு வேக வைத்து இறக்கி வைக்கவும். ஆரிய பின்பு உருளைக்கிழங்கை தோல் உரித்து மசித்து வைத்துக் கொள்ளவும்.

மற்றொரு கடாயில் சூடானதும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு உளுந்தம் பருப்பு சேர்த்து பொரிந்தவுடன் வெங்காயம் பச்சை மிளகாய் கருவேப்பிலை இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கலர் மாறாமல் வதக்கி கொள்ளவும்.

வதங்கிய பின்பு மஞ்சத்தூள் சேர்த்து அதனுடன் வேகவைத்த மசித்த கிழங்குடன் பச்சைப் பட்டாணி சேர்த்து அதனுடன் நறுக்கிய தக்காளி சேர்த்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து வேகவைத்து இறக்கிக் கொள்ளவும்.

இப்போது சுவையான உருளைக்கிழங்கு பட்டாணி குருமா தயார்.



குருமா குழம்பு (kuruma kulambu recipe in tamil):
தேவையான பொருட்கள்:
4 - பரிமாறுவது
கேரட் 1 No's
துவரம் பருப்பு 1/2 கப்
பீன்ஸ் 6 No's
பச்சை பட்டாணி 1 கப்
5 பீஸ் காலிஃளார்
குடை மிளகாய் 1 சிறியது
சின்ன வெங்காயம் 10 No's

அரைக்க:
கொத்தமல்லி இலை சிறிது
ஆயில் 2 tsp
இஞ்சி 1 துண்டு
பூண்டு 4 பல்
துருவிய தேங்காய் 2 tbsp
மிளகாய் தூள் 1/2 tsp
கரம் மசாலா 1 spoon
தனியா தூள் 1/2 tsp
பட்டை 1 No's
கிராம்பு 2 No's

தாளிக்க:
நெய் 2 tsp
சீரகம் 1 tspn
கருவேப்பிலை சிறிது
உப்பு தேவைக்கேற்ப

செய்முறை:
காய்கறிகளை கழுவி நறுக்கி வைக்கவும்.

கடாயில் ஆயில் ஊற்றி இஞ்சி பூண்டு துருவிய தேங்காய் பட்டை கிராம்பு வதக்கி,அதனுடன் மிளகாய் தூள் கரம் மசாலா தூள் தனியா தூள் சேர்த்து நைசாக அரைக்கவும்.

துவரம் பருப்பு குக்கரில் வேக வைக்கவும்.கடாயில் நெய் ஊற்றி சீரகம் கருவேப்பிலை தாளித்து வெங்காயம் தக்காளி வதக்கி நறுக்கிய காய்களை சேர்த்து உப்பு,அரைத்த மசாலாவை சேர்த்து,கடைசியாக வெந்த துவரம் பருப்பை சேர்க்கவும்.

துவரம் பருப்பு சேர்த்து கலக்கி கொதிக்க விடவும்.நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.குருமா குழம்பு ரெடி.சாதத்துடன் பொறித்த வடகம் வைத்து சாப்பிடலாம்.இட்லி தோசைக்கும் நன்றாக இருக்கும்.


Post a Comment

Previous Post Next Post