வாழைக்காய் குழம்பு ||

சூப்பரா செய்யலாம் வாழைக்காய் வைத்து காரசாரமான இந்த வாழைக்காய் குழம்பு…! || சுவையிலும் சுவையான வாழைக்காய் கார குழம்பு செய்வது எப்படி? - by AMMA SAMAYAL
வாழைக்காய் வைத்து பொடிமாஸ், பொரியல், பஜ்ஜி என்று மட்டும் இல்லாமல் நாம் சுவையான வாழைக்காய் குழம்பு தயார் செய்ய முடியும்.

வாழைக்காய் குழம்பு காரசாரமான சுவை நிறைந்த குழம்பு.

சூடான சாதத்தோடு இந்த வாழைக்காய் குழம்பும் அப்பளமும் இருந்தால் போதும் எவ்வளவு சாப்பிட்டீர்கள் என்று உங்களுக்கே தெரியாது. அந்த அளவிற்கு சுவை நிறைந்த இந்த வாழக்காய் குழம்பை எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.

வாழைக்காய் பிடிக்காதவரா நீங்கள்? இப்படி செஞ்சா நீங்களே விரும்பி சாப்பிடுவீங்க! வாழைக்காயை வைத்து அருமையான வாழைக்காய் சாப்ஸ்…!

வாழைக்காய் குழம்பு செய்வதற்கு முதலில் இரண்டு வாழைக்காய்களை எடுத்து அதன் தோலை மேல்புறம் லேசாக சீவிக்கொள்ள வேண்டும்.

இந்த வாழைக்காயை பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

வாழைக்காய் குழம்பு:
தேவையான பொருட்கள்:
5 நபர்
வாழைக்காய் 2
வெங்காயம் 2
தேங்காய் 1/2 மூடி
தக்காளி 3
சிறிதளவு கறிவேப்பிலை இலைகள்
இஞ்சி பூண்டு விழுது 1 tbsp
மிளகாய் தூள் 1 tsp
கொத்தமல்லி இலைகள் சிறிதளவு
தண்ணீர் தேவையான அளவு
உப்பு தேவையான அளவு
கிராம்பு 3
ஏலக்காய் 1
சீரகம் 1 tsp
பட்டை 1
எண்ணெய் 4-5 tbsp
மஞ்சள் தூள் 1/4 tsp
கரம் மசாலா தூள் 1/2 tsp
மல்லி தூள் 1 tbsp


செய்முறை:
நேரம் : 30 நிமிடங்கள்

வாழைக்காயை தோல் சீவி நறுக்கி எடுத்து கொள்ளவும். வெங்காயம் மற்றும் தக்காளியை தனித் தனியாக விழுது களாக அரைத்து எடுத்து கொள்ளவும். தேங்காயை அரைத்து எடுத்து கொள்ளவும்.

குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்க்கவும். பிறகு வெங்காய விழுது சேர்த்து வதக்கவும். இதில் சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். கறிவேப்பிலை இலைகள் சேர்க்கவும். பிறகு தக்காளி விழுது சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.

இப்போது வாழைக்காயை சேர்த்து நன்கு கிளறி விடவும். பின் அரைத்து வைத்த தேங்காய் சேர்க்கவும். இதனுடன் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து குக்கரை மூடி விசில் போடவும்.

3 விசில் விடவும். சிறிது நேரம் கழித்து திறந்து கொத்தமல்லி இலை தூவி இறக்கவும். வாழைக்காய் குழம்பு தயார்.


வாழைக்காய் கார குழம்பின் ஊட்டச்சத்து தகவல்கள்:
கலோரி (Calories): 180-220

கொழுப்பு (Fat): 6-8g

கார்போஹைட்ரேட் (Carbohydrates): 25-30g

நார்ச்சத்து (Dietary Fiber): 4-5g

புரதம் (Protein): 3-4g

பொட்டாசியம் (Potassium): 400-500mg

விட்டமின் C: 10-15% RDA

விட்டமின் B6: 10% RDA

குறிப்பு: ஊட்டச்சத்து மதிப்புகள் பயன்படுத்தப்படும் எண்ணெய் மற்றும் குழம்பின் அளவுகளின் அடிப்படையில் மாறலாம். வாழைக்காய் நார்ச்சத்து அதிகமுள்ளதால் ஜீரணத்திற்கு உதவுகிறது.




Post a Comment

Previous Post Next Post