இட்லி பொடி & குழம்பு மசாலா பொடி ரொம்ப சிம்பிள்.. சுவையான இட்லி மற்றும் குழம்பு மசாலா பொடி செய்வது எப்படி?

Idli Podi Recipe for Dosa & Kulambu Masala Powder - How to Make at Home? by AMMA SAMAYAL
இட்லி பொடி செய்வது எப்படி?
இட்லி, தோசை ஏற்ற சுவையான இட்லி பொடி செய்வது எப்படி என்பது குறித்து இதில் காண்போம்.
தேவையான பொருட்கள்:
வெள்ளை உளுந்து 1/2 கப்
கடலைப்பருப்பு 1 கப்
எள்ளு 50 கிராம்
நல்லெண்ணெய் 5 ஸ்பூன்
பெருங்காயம் 2
பூண்டுப்பல் 10
கறிவேப்பிலை 2 கைப்பிடி
காய்ந்த மிளகாய் 15 - 20
உப்பு தேவையான அளவு

செய்முறை:
ஒரு கடாயில் வெள்ளை உளுந்தை வறுத்து எடுத்த பின் அதில் கடலைப்பருப்பை வறுக்கவும்

பிறகு வருத்தத்தை ஒன்றாக எடுத்துக் கொள்ளவும் பின் அதே கடாயில் எள்ளு எடுத்து நன்கு வறுத்து அதோடு சேர்த்துக் கொள்ளவும்.

பிறகு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி பெருங்காய கட்டியை சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ளவும் பிறகு அதில் 10 பூண்டுப்பல் தோலுடன் சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ளவும்.

நன்கு வதக்கிய பின் கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கிக் கொண்டு பிறகு அத்துடன் காய்ந்த மிளகாய் சேர்த்து அதையும் நன்கு வறுத்துக் கொள்ளவும்.

அனைத்தையும் ஒன்றாக சேர்த்து பின் ஆறிய பிறகு மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும் அத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.

பொடி ஆகும் வரை நன்கு அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த பொடியை இட்லி தோசையுடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.




குழம்பு மசாலா பொடி செய்வது எப்படி?
சமையலுக்குத் தேவையான மசாலா பொடியை மிக மிக அருமையான முறையில் தயார் செய்வது ஒரு நுணுக்கமான கலை இந்த முறையில் மசாலா பொடி தயார் செய்து வைத்துக்கொண்டால் அனைத்து குழம்பு வகைகள் செய்து கொள்ளலாம் 6 மாதம் வரை கெடாது.


தேவையான பொருட்கள்:
விரலி மஞ்சள் 100 கிராம்
நாட்டு மல்லி ஒரு கிலோ
வத்தல் 600 gm
சீரகம் 600 கிராம்
மிளகு 100 கிராம்
கடுகு 100 கிராம்
வெந்தயம் 100 கிராம்
கட்டிப் பெருங்காயம் 100 கிராம்
துவரம்பருப்பு 200 கிராம்
குழம்பு கடலை பருப்பு 200 கிராம்
அளவு கருவேப்பிலை 2 கைப்பிடி

செய்முறை:
வத்தலை வெயிலில் நன்கு காய வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும் மல்லியை சுத்தம் செய்து வைக்கவும்.

ஒரு வாணலியில் அடுப்பில் வைத்து சூடானதும் மல்லியை சிறிது சிறிதாகப் போட்டு லேசாக வாசனை வரும் வரை வறுக்கவும் பின்னர் சீரகத்தை வாசனை வரும் வரை வறுக்கவும்

மிளகு லேசாக பொரியும் வரை வறுக்கவும்

பின்னர் கடுகு பொரியும் வரை வறுக்கவும் அடுத்து வெந்தயம் சிவக்கும் வரை வறுக்கவும் அடுத்துப் பெருங்காயம் பொரியும் வரை வறுக்கவும்

துவரம் பருப்பை நன்கு சிவக்கும் வரை வறுக்கவும் கடலைப் பருப்பும் நன்கு சிவக்கும் படி வறுக்கவும் கருவேப்பிலை நன்கு சருகு போல் ஆகும் வரை வறுக்கவும்

வறுத்த அனைத்து பொருட்களையும் நன்கு ஆறவிடவும் மஞ்சள் வத்தல் இவை இரண்டும் வறுக்கத் தேவையில்லை

நன்கு ஆறியதும் மஞ்சள் வத்தல் அனைத்தும் சேர்த்து மிஷினில் கொடுத்து நைசாக அரைக்கவும் சாம்பார் முதல் அனைத்து குழம்பு களுக்கும்கூட்டு குருமா வகைகளுக்கும் அசைவ குழம்பு களுக்கும் மிக மிக அருமையான ருசியான குழம்பு மசாலா பொடி தயார்

இந்தக் குழம்பு மசாலா பொடியை ஒரு காற்றுப்புகாத டப்பாவில் வைத்துக்கொண்டு அவ்வப்பொழுது தேவைக்கு மட்டும் சிறிய டப்பாவில் எடுத்து பயன்படுத்தலாம்



Post a Comment

Previous Post Next Post