முட்டை குழம்பு (EGG CURRY Recipe in Tamil) | முட்டை தொக்கு (EGG GRAVY Recipe in Tamil) |

முட்டை குழம்பு மற்றும் முட்டை தொக்கு எப்படி செய்வது என்பதை பார்ப்போம் by AMMA SAMAYAL
முட்டை குழம்பு (EGG CURRY Recipe in Tamil)
3 பரிமாறுவது
தேவையான பொருட்கள்:
முட்டை 4
இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
மூடி தேங்காய் 1/2
சீரகம் 1/2 ஸ்பூன்
மிளகு 1/2 ஸ்பூன்
சோம்பு 1/2 ஸ்பூன்
வெங்காயம் 2
தக்காளி 2
மிளகாய் தூள் 1 ஸ்பூன்
தனியா தூள் 1/2 ஸ்பூன்
உப்பு தேவையானஅளவு
கரம் மசாலா தூள் 1/2 ஸ்பூன்

செய்முறை:
முட்டையை தண்ணீர் ஊற்றி வேக வைத்து தோல் உரித்து வைத்துக் கொள்ளவும்

வாணலியில் வெங்காயம் தக்காளி வதக்கவும் பின் அதில் இஞ்சி பூண்டு விழுதையும் சேர்த்து வதக்கவும்

அரைக்க தேங்காய், வர கொத்தமல்லி, சின்ன வெங்காயம், சீரகம், மிளகு, சோம்பு, மஞ்சள் தூள் அனைத்தையும் நன்றாக வதக்கிய பிறகு அரைத்து வைத்துக் கொள்ளவும்

வெங்காயம் தக்காளி வதக்கிய பின் அதில் உப்பு சேர்த்து பின் இந்த அரைத்த கலவையை ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்

கொதி வந்ததும் முட்டையை போர்க்கால் குத்தி குழம்பில் போட்டு சிறிது நேரம் கொதிக்க விடவும் எண்ணெய் பிரிந்து வந்த உடனே இறக்கி விடவும் முட்டை குழம்பு ரெடி


முட்டை தொக்கு (EGG GRAVY Recipe in Tamil)
2 நபர்களுக்கு பரிமாறுதல்
தேவையான பொருட்கள்:
முட்டை 4
பெரிய வெங்காயம் 1
தக்காளி 1
கருவேப்பிலை 1 கொத்து
கொத்தமல்லி 1 கொத்து
இஞ்சி பூண்டு விழுது 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் ½ தேக்கரண்டி
மிளகாய் தூள் 1 தேக்கரண்டி
மல்லி தூள் 1 தேக்கரண்டி
உப்பு
எண்ணெய் 25 மில்லி

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் முட்டையை வேக வைத்து எடுக்கவும்.

பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் இஞ்சி பூண்டு, வெங்காயம்,தக்காளி,கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும்.

பின்பு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

பின்பு அதில் வேக வைத்த முட்டையை சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி இறக்கவும்.


Post a Comment

Previous Post Next Post