கொத்தவரங்காய் கார குழம்பு ||

(cluster beans gravy recipe in Tamil) || kotthavarangai karakulambhu recipe in tamil - by AMMA SAMAYAL
கொத்தவரங்காய் கார குழம்பு:
(cluster beans gravy recipe in Tamil):
கொத்தவரங்காயில் பல நன்மைகள் உள்ளன. இது செரிமானத்தை மேம்படுத்துகிறது, மலச்சிக்கலை நீக்குகிறது, எலும்புகளை பலப்படுத்துகிறது, நரம்புகளை வலுப்படுத்துகிறது, இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது, எடை குறைக்க உதவுகிறது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

கொத்தவரங்காயை உணவில் சேர்த்துக்கொள்ளும் முறைகள்:

கொத்தவரங்காயை சமைத்து சாப்பிடலாம், கொத்தவரங்காயை ஜூஸாகவும் குடிக்கலாம், கொத்தவரங்காயை பொரியலாகவும் செய்யலாம்.

கொத்தவரங்காயை உணவில் சேர்த்துக்கொள்வது உடல்நலத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கொத்தவரங்காய் வைத்து சுவையான கார குழம்பு செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
5 நபர்கள்
கொத்தவரைங்காய் 1/4 kg
எண்ணெய் 2 tbsp
பெரிய வெங்காயம் 1 No.
புளி 1 எலுமிச்சை அளவு
பெரிய தக்காளி 1 No.
மஞ்சள் தூள் 1/2 spoon
குழம்பு மிளகாய் தூள் 2 ஸ்பூன்
துருவிய தேங்காய் 1/2 கப்
சின்ன வெங்காயம் 10
சீரகம் 1 ஸ்பூன்
கறிவேப்பிலை 1 கொத்து
கடுகு 1 ஸ்பூன்
உப்பு தேவையானஅளவு
செய்முறை:
முதலில் கொத்தவரங்காயை நீளமாக நறுக்கிக் கொள்ளவும்.. கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் கொத்தவரங்காயும் நீளமாக நறுக்கிய வெங்காயத்தையும் போட்டு நன்றாக வதக்க வேண்டும்.. வதக்கி செய்வதால் குழம்பு மணமாக இருக்கும்..

நன்றாக வதங்கியதும் அதனுடன் கரைத்து வைத்த புளியையும் சேர்த்து மிளகாய் தூள், மஞ்சள் தூள், தக்காளி சேர்த்து புளியும் மிளகாய் தூளும் பச்சை வாசனை போகும் அளவு நன்றாக கொதிக்க விடவும்.. அதே சமயம் காயும் நன்றாக வெந்துவிடும்.. காய் வெந்த பிறகு உப்பும் சேர்த்து கொதிக்க விடவும்.. முதலிலேயே உப்பு சேர்த்தால் காய்கறி வேக நேரம் ஆகும்..

மிக்ஸி ஜாரில் தேங்காய், சீரகம், சாம்பார் வெங்காயம் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்..

குழம்பு கொதித்துக் கொண்டிருக்கும் போது அரைத்த தேங்காயை அதில் ஊற்றி நன்றாக கெட்டியாக வரும் அளவு கொதிக்க விடவும்.. கொதித்து கெட்டியானதும் இறுதியாக கொத்தமல்லி இலை தூவி அடுப்பை அணைத்து விடவும்..

கடாய் வைத்து மீதமுள்ள எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை தாளித்து குழம்பில் சேர்க்கவும்..

இப்போது சூடான சுவையான அருமையான கொத்தவரங்காய் காரக்குழம்பு தயார்..


Post a Comment

Previous Post Next Post