மணத்தக்காளி வற்றல் குழம்பு | அப்பளக் குழம்பு | சுண்டைக்காய் சாம்பார்

3 குழம்பு வகை | Easy Cooking by AMMA SAMAYAL
மணத்தக்காளி வற்றல் குழம்பு:
தேவையானவை:
மணத்தக்காளி வற்றல் 4 டீஸ்பூன்
புளி எலுமிச்சைப் பழ அளவு
உப்பு தேவையான அளவு
பெருங்காயத்தூள் சிறிதளவு
சாம்பார் பொடி 2 tbsp
காய்ந்த மிளகாய் 2
எண்ணெய் 50 மில்லி
கறிவேப்பிலை சிறிதளவு
கடுகு 1/2 tsp
வெந்தயம் 1/2 tsp
கடலைப்பருப்பு 1/2 tbsp
செய்முறை:
புளியை 200 மில்லி தண்ணீர் விட்டு நன்கு கரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, பெருங்காயத் தூள், வெந்தயம் சேர்த்து, காய்ந்த மிளகாயைக் கிள்ளிப் போட்டு, சாம்பார் பொடி சேர்த்து வறுக்கவும்.

பிறகு, மணத்தக்காளி வற்றலையும் போட்டுக் கிளறி, புளிக்கரைசலை ஊற்றி, உப்பு சேர்த்துக் கொதிக்கவிட்டு... கறிவேப்பிலை தூவி இறக்கவும்.



அப்பளக் குழம்பு:
தேவையானவை:
புளி எலுமிச்சைப் பழ அளவு
சாம்பார் பொடி 2 tbsp
அப்பளம் 2
கடுகு 1/2 tsp
கடலைப்பருப்பு, 1/2 tsp
வெந்தயம் 1/2 tsp
காய்ந்த மிளகாய் 2
எண்ணெய் 2 tsp
உப்பு தேவையான அளவு
செய்முறை:
வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, வெந்தயம், கடலைப்பருப்பு தாளித்து, காய்ந்த மிளகாயைக் கிள்ளிப் போட்டு, அப்பளத்தை ஒன்று இரண்டாக உடைத்துப்போட்டு, சாம்பார் பொடியை சேர்த்து வறுக்கவும்.

பிறகு, புளிக்கரைசலை ஊற்றி, உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும்.

காய்கறிகள் கைவசம் இல்லாத சமயத்தில், இந்தக் குழம்பு கை கொடுக்கும்.



சுண்டைக்காய் சாம்பார்:
தேவையானவை:
பச்சை சுண்டைக்காய் 100 கிராம்
துவரம்பருப்பு 100 கிராம்
புளி எலுமிச்சைப் பழ அளவு
பெருங்காயத்தூள் - சிறிதளவு
வெந்தயம் - 1 டீஸ்பூன்
கடுகு 1 டீஸ்பூன்
சாம்பார் பொடி 4 டீஸ்பூன்
எண்ணெய் 4 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
செய்முறை:
துவரம்பருப்பை வேகவைக்கவும். கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, சுண்டைக்காயை தட்டிப் போட்டு வதக்கவும்.

புளியைக் கரைத்து இதனுடன் சேர்த்து... உப்பு, சாம்பார் பொடி சேர்த்துக் கொதிக்கவிடவும். பிறகு, வேகவைத்த பருப்பை சேர்க்கவும்.

மீதமுள்ள எண்ணெயில் கடுகு, வெந்தயம், கடலைப்பருப்பை தாளித்து சேர்த்து, பெருங்காயத்தூளையும் சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும்.



Post a Comment

Previous Post Next Post