வெண்பொங்கல் இந்த மாதிரி செய்து பாருங்க..

Ven Pongal | வென் பொங்கல் | How To Make Pongal | by AMMA SAMAYAL
வெண்பொங்கல் செய்வது எப்படி?
Ven Pongal: ஒருமுறை வெண்பொங்கல் இந்த மாதிரி செய்ங்க.. சுவை வேற லெவல் இருக்கும்!
உங்கள் வீட்டில் தினமும் இட்லி, தோசையா? இதைப் பழக்கமாக செய்து சாப்பிட்டு போரடித்துவிட்டதா? அப்படியானால், இன்று காலை சுவையான வெண்பொங்கல் செய்து பாருங்கள்!

வெண்பொங்கல் தென்னிந்தியாவின் பாரம்பரிய உணவுகளில் ஒன்றாகும். சத்துக்கள் நிறைந்ததால் இது பலருக்கும் மிகவும் பிடித்த காலை உணவாக மாறியுள்ளது.

நீங்கள் செய்யும் வெண்பொங்கல் சுமாராக தான் இருக்கும் என்று நினைத்தால், கவலைப்பட வேண்டாம்! இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள முறையை பின்பற்றுங்கள் – உங்கள் வெண்பொங்கல் ருசியோ ருசி!

சரி, இப்போது பார்க்கலாம் – முழுமையான சுவையில் வெண்பொங்கல் செய்வது எப்படி?

வெண்பொங்கல் செய்ய:
தேவையான பொருட்கள்:
பச்சரிசி 1/2கப்
பாசிப்பருப்பு 1/2கப்
நெய் 3 ஸ்பூன்
சீரகம் 1 ஸ்பூன்
மிளகு 1/2 ஸ்பூன்
முந்திரி 10
பெருங்காயத்தூள் 1 சிட்டிகை
இஞ்சி 1 துண்டு (நறுக்கியது)
கருவேப்பிலை சிறிதளவு
உப்பு சுபைக்கு ஏற்ப
தண்ணீர் 4 கப்

செய்முறை:
வெண்பொங்கல் செய்ய முதலில், எடுத்து வைத்த பச்சரிசி மற்றும் பாசிப்பருப்பை நன்றாக தண்ணீர் கழுவி பிறகு தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்.

பிறகு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில், நாலு கப் தண்ணீர் சேர்த்து அது ஊற வைத்த பச்சரிசி மற்றும் பாசிப்பருப்பை சேர்க்கவும்.

பின் அதில் சீரகம், தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து 40 நிமிடங்கள் வேக வையுங்கள்.

மறுபுறம் அடுப்பில் ஒரு கடையை வைத்து நெய் ஊற்றி சூடானதும், அதில் மிளகு மற்றும் சின்ன துண்டுகளாக நறுக்கி வைத்த இஞ்சியும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பிறகு அதில் சீரகம், பெருங்காயத்தூள், முந்திரி ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ளுங்கள். இறுதியாக அதில் கருவேப்பிலையை சேர்த்துக் கொள்ளுங்கள்.

கருவேப்பிலை நன்கு பொரிந்ததும் அவற்றை அப்படியே தயார் அனுப்புங்களில் சேர்த்து நன்றாக கிளறி கொள்ளுங்கள். அவ்வளவுதான் அட்டகாசமான சுவையில் வெண்பொங்கல் ரெடி..!

அவ்வளவுதான் இதனுடன் சாம்பார், தேங்காய் சட்னி, உளுந்த வடை வைத்து சாப்பிட்டால் சுவை வேற லெவல்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதில் எங்களுக்கு அனுப்புங்கள்.


Post a Comment

Previous Post Next Post