கிராமத்து Style வெங்காய சட்னி

இட்லி, தோசைக்கு இந்த வெங்காய சட்னியை செஞ்சு சாப்பிடுங்க.. | Tasty Onion Chutney by AMMA SAMAYAL
வெங்காய சட்னியை இப்படி செஞ்சி பாருங்க:
இட்லி, தோசைக்கு கிராமத்து ஸ்டைல் வெங்காய சட்னி சுவையாக இருக்கும்.

சட்னி செய்வதற்கு பெரிதாக நேரமும் போகாது. அந்த வகையில் இட்லி, தோசைக்கு கிராமத்து ஸ்டைல் வெங்காய சட்னி செய்து கொடுக்கலாம். இதனை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு இந்த கிராமத்து ஸ்டைல் வெங்காய சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

கீழே கிராமத்து ஸ்டைல் வெங்காய சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
எண்ணெய் 2 டீஸ்பூன்
பூண்டு 5 பல்
சின்ன வெங்காயம் 20
வரமிளகாய் 4
புளி சிறிய துண்டு
கறிவேப்பிலை சிறிது
கொத்தமல்லி சிறிது
உப்பு சுவைக்கேற்ப
தணணீர் தேவையான அளவு

தாளிப்பதற்கு...
எண்ணெய் 2 டீஸ்பூன்
கடுகு 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிது

செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பூண்டு மற்றும் சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.

பின்னர் அதில் வரமிளகாய், புளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

அடுத்து கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லியை சேர்த்து சிறிது நேரம் வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.

பின் வதக்கிய பொருட்களை அம்மிக் கல்லில் அல்லது மிக்சர் ஜாரில் போட்டு, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு கிண்ணத்தில் அரைத்த சட்னியை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான கிராமத்து ஸ்டைல் வெங்காய சட்னி தயார்.

NUTRITION:
Calories
A 35 g serving of vengaya chutney contains 31 calories. A cup of vengaya chutney contains 247 calories.

Fat
A 35 g serving of vengaya chutney contains 2.4 g of total fat. A cup of vengaya chutney contains 20 g of total fat.

Carbohydrates
A 35 g serving of vengaya chutney contains 2.2 g of total carbohydrates. A cup of vengaya chutney contains 17 g of total carbohydrates.

Protein
A 35 g serving of vengaya chutney contains 0.4 g of protein. A cup of vengaya chutney contains 2.9 g of protein.

Other nutrients
Vengaya chutney also contains magnesium, potassium, iron, calcium, and sodium.



Post a Comment

Previous Post Next Post