தட்டைப் பயறு கத்திரிக்காய் குழம்பு

சுவையாக வீட்டில் இப்படி எளிமையான முறையில் தயார் செய்து பாருங்க! Thatta Payir Kuzhambu Recipe by AMMA SAMAYAL
தட்டைப் பயறு கத்திரிக்காய் குழம்பு செய்வது எப்படி?
மணக்க மணக்க வீட்டிலேயே சுவையான தட்டைப் பயறு குழம்பு | இப்படி செஞ்சி பாருங்க....

தேவையான பொருட்கள்:
தட்டப்பயறு 100 கிராம்

அரைக்க:
நல்லெண்ணெய் 2 tbsp
சின்ன வெங்காயம் 10
தக்காளி 2
துருவிய தேங்காய் 1/2 cup
குழம்பு மிளகாய் தூள் 2 spoon
மிளகாய் தூள் 1/2 spoon
மஞ்சள் தூள் 1/4 spoon
உப்பு தேவைக்கேற்ப

வதக்க:
நல்லெண்ணெய் 2 tbsp
கடுகு 1/2 spoon
சின்ன வெங்காயம் 10
பூண்டு பல் 5
கருவேப்பிலை ஒரு கொத்து
உருளைக்கிழங்கு 1
முருங்கைக்காய் 1
புளி நெல்லிக்காய் அளவு

செய்முறை:
தட்டைப்பயிறு குழம்பு செய்வதற்கு முதலில் 100 கிராம் அளவிற்கு தட்டைப்பயிரை ஒரு குக்கரில் சேர்த்து இரண்டு நிமிடம் லேசாக வறுத்து, நன்கு கழுவி சுத்தம் செய்து மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி நான்கைந்து விசில் விட்டு எடுத்துக் கொள்ளுங்கள். வறுத்து சேர்ப்பதால் சீக்கிரம் வேகும்.

பின்னர் தேவையான மற்ற எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

வறுத்து அரைக்க அடுப்பில் ஒரு வாணலியை வையுங்கள்.

அதில் நல்லெண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் பத்து சின்ன வெங்காயத்தை தோல் உரித்து சேர்த்து வதக்குங்கள்.

லேசாக இவை வதங்கியதும் தக்காளி துண்டுகளை சேர்த்து வதக்குங்கள். மசிந்ததும் துருவிய தேங்காய் சேர்த்து வதக்குங்கள்.

பின்னர் மிளகாய் தூள், குழம்பு தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை வரிசையாக சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு போட்டு ஒரு முறை நன்கு பச்சை வாசம் போக வதக்கி விடுங்கள்.

பின்னர் ஆறியதும் ஒரு மிக்சர் ஜாரில் சேர்த்து நைசாக பேஸ்ட் போல அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் அதே பேனில் மீண்டும் நல்லண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். நசுக்கிய பூண்டு பற்கள், சின்ன வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும்.

இவை நன்கு வதங்கியதும் ஒரு கொத்து கருவேப்பிலை போட்டு ஒரு பெரிய உருளைக்கிழங்கை தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சேருங்கள்.

இதனுடன் நீங்கள் விருப்பப்பட்ட காய்கறிகளையும் சேர்க்கலாம். முருங்கைக்காய் சேர்த்தால் சுவையாக இருக்கும்.

தேவையான அளவிற்கு உப்பு போட்டு காய்களை நன்கு வதக்கி விடுங்கள். பின்னர் நீங்கள் வேக வைத்துள்ள தட்டைப் பயறையும் சேர்த்து ஒரு முறை நன்கு பிரட்டி விடுங்கள்.

அரைத்து வைத்த விழுதை இப்பொழுது சேர்த்து, தேவையான அளவிற்கு புளிக்கரைசலை சேர்க்க வேண்டும்.

குழம்பு எவ்வளவு வேண்டுமோ அந்த அளவிற்கு கொஞ்சம் போல தண்ணீர் சேர்த்து நன்கு மூடி போட்டு கொதிக்க விடுங்கள்.

இவை கொதித்து கெட்டியாக வரும் பொழுது சுவை வீடே மணக்கும் படியாக அருமையாக இருக்கும். இதை சாதத்துடன் சாப்பிட்டுப் பாருங்கள், நாவிற்கு விருந்து படைப்பது போல இருக்கும்.



Post a Comment

Previous Post Next Post