ரசம் செய்வது எப்படி?

மணக்க மணக்க வீட்டிலேயே சுவையான ரசம் | இப்படி செஞ்சி பாருங்க | RASAM RECIPE - AMMA SAMAYAL
ரசம் செய்வது எப்படி?
மணக்க மணக்க வீட்டிலேயே சுவையான ரசம் | இப்படி செஞ்சி பாருங்க....
ரசம் செய்ய:
தேவையான பொருட்கள்:
புளிக் கரைசல் சிறிதளவு
தக்காளி 2
சீரகம் 1 ஸ்பூன்
மிளகு 1 ஸ்பூன்
கொத்தமல்லித் தழை சிறிதளவு
உப்பு தேவையான அளவு
பூண்டு 6 பல்
எண்ணெய் தேவையான அளவு
கருவேப்பில்லை சிறிதளவு
மிளகாய் வத்தல் 2
பச்சை மிளகாய் 1
பெருங்காயத்தூள் 1/2 ஸ்பூன்

செய்முறை:
மிக்ஸி ஜாரில் 1 ஸ்பூன் சீரகம்,மிளகு,பச்சை மிளகாய் சேர்க்கவும்.

6 பல் பூண்டு,சிறிதளவு கொத்தமல்லித் தழை,கருவேப்பில்லை சேர்க்கவும்.

அனைத்தையும் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

தேவையான அளவு புளியை ஊற வைத்து கரைத்துக் கொள்ளவும்,அதனுடன் 2 தக்காளி சேர்த்து கரைத்துக் கொள்ளவும்,சிறிதளவு கொத்தமல்லி தழை சேர்க்கவும்.

ஒரு பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்தப்பருப்பு சேர்த்து கடுகு வெடிக்கவும், கறிவேப்பிலை, வத்தல் சேர்க்கவும்.

அதனுடன் அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்,பின்பு,புளிக் கரைசலை சேர்க்கவும்.

1/2 ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து,தேவையான அளவு உப்பு சேர்த்து நுரை பொங்கவும் அடுப்பை அனைத்துவிடவும்.

ரசத்தை கொதிக்க விடக் கூடாது... சிம்பிள் ரசம் தயார்.

ரசத்தை சுவையாய் வைப்பதற்கு சில ஐடியாக்களை காண்போம்:
புளியை அரிசி களைந்த தண்ணீரில் ஊற போட்டு, பிழிந்து அதில் ரசம் வைத்தால் நன்றாக இருக்கும்.

சுடுதண்ணீரில் புளியை ஊற வைத்தால் சீக்கிரமாக புளித்தண்ணீர் கிடைக்கும்.

புளி குறைவாக போட்டு செய்தால் ரசம் அருமையாக இருக்கும்.

தக்காளியை வதக்கி மிளகு சீரகத்துடன் அரைத்து சேர்த்தாலும் ரசம் சூப்பரா இருக்கும்.

தாளிக்கும்போது இஞ்சித்துருவல், கருவேப்பிலை, பெருங்காயம் சேர்த்தால் ரசம் மணக்கும்.

கொஞ்சம் முருங்கைக்கீரை சேர்த்து வதக்கி ரசம் வைத்தால் நல்ல வாசனையாக இருக்கும்.

முருங்கைக்கீரை உருவிய பிறகு அதன் காம்புகளை சுத்தம் செய்து ரசத்தில் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் மூட்டுகளுக்கு நல்ல பலம் கிடைக்கும்.

முருங்கை பிஞ்சு மற்றும் பிஞ்சு காய்கறிகளை பொடியாக நறுக்கி ரசத்தில் போட்டு கொதிக்க வைத்தாலும் ரசம் ருசிக்கும்.

கற்பூரவள்ளி இலை, வெற்றிலை ,துளசி இலைகள், புதினா போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை பொடிதாக நறுக்கி ரசத்தில் போட்டு கொதிக்க வைத்தாலும் மூலிகை ரசம் ருசிக்கும்.

சின்ன வெங்காயத்துடன் பூண்டு பற்களை நசுக்கிப் போட்டு தாளிதம் செய்து ரசம் வைத்தாலும் ரசம் அருமையாக இருக்கும்.

புளி ரசம் வைக்கும் பொழுது சிறிதளவு வெல்லக்கட்டியை சேர்த்தால் அருமையாக இருக்கும்.

எந்த வகை ரசமாக இருந்தாலும் புளிப்பு குறைவாக இருந்தால் சிறிதளவு எலுமிச்சைச் சாறு பிழிந்து விடலாம். புளிப்பை சமன் செய்து ரசத்தின் ருசியை அதிகரித்துக் காட்டும்.

சுண்டல் வேக வைத்த தண்ணீர், பட்டாணி வேக வைத்த தண்ணீர் போன்றவற்றிலும் மிளகு, சீரகம் தட்டிப் போட்டு ரசம் வைத்து ருசிக்கலாம். உடம்புக்கு நல்ல சத்து கிடைக்கும்.

தேங்காய் பாலில் ரசம் வைத்து அருந்தலாம். வித்தியாசமான சுவையில் அசத்தும்.

காய்கறிகள் வெந்த தண்ணீரை எடுத்து ரசம் வைக்கலாம். ருசி அபாரமாக இருக்கும்.

நெல்லிக்காயை துருவி சேர்த்து ரசம் வைக்கலாம். அதேபோல் மாங்காயின் வெள்ளைப்பகுதியை துருவி சேர்த்தும் ரசம் வைக்கலாம். அந்தந்த சீசனில் அப்படி பயன்படுத்தினால் உடம்புக்கு தேவையான சத்து கிடைக்கும்.

சாம்பார் பொடி ரசப் பொடி இரண்டையும் சமமாக கலந்து, தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, சின்ன வெங்காயம், கருவேப்பிலை, அரைத்துப் போட்டு ரசத்தில் கொதிக்க வைத்து பரிமாறி பாருங்கள் டேஸ்ட்டாக இருக்கும்.

அன்னாசி, ஆரஞ்சு, நாரத்தை, எலுமிச்சை, புளிப்பான திராட்சை பழச்சாறுகளை எடுத்தும் ரசம் வைக்கலாம்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான ரசம் வைத்து சாப்பிட்டால் செரிமான சக்தி சிறப்புடன் செயல்படும். தேவையற்ற வாயுக்கள் வயிற்றிலிருந்து நீங்கிவிடும். பெருமளவில் வயிற்று உபாதைகளை வராமல் தடுத்துவிடும்.



Post a Comment

Previous Post Next Post