பருப்பு குழம்பு செய்வது எப்படி?

சுவையான பருப்பு குழம்பு இப்படி செய்து பாருங்கள் | Paruppu Kulambu in tamil by AMMA SAMAYAL
பருப்பு குழம்பு செய்வது எப்படி?
பருப்பு குழம்பு செய்ய:
தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு 1/2 கப்
சின்ன வெங்காயம் 10
பூண்டு 3 பல்
மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
துருவிய தேங்காய் 1/4 கப்
பச்சை மிளகாய் 2
சீரகம் 1/4 ஸ்பூன்
கடுகு 1 ஸ்பூன்
வரமிளகாய் 2
தக்காளி 1
கறிவேப்பிலை சிறிதளவு
நெய் 1 ஸ்பூன்
உப்பு சுவைக்கு ஏற்ப
தண்ணீர் தேவையான அளவு
எண்ணெய் தேவையான அளவு

செய்முறை:
பருப்பு குழம்பு செய்ய முதலில், ஒரு கடையை அடுப்பில் வைத்து அதில் எடுத்து வைத்த பாசிப்பருப்பை போட்டு பொன்னிறமாக வதக்கிக் கொள்ளுங்கள்.

பிறகு அதை குக்கரில் போட்டு அதனுடன் மஞ்சள் தூள், சின்ன வெங்காயம் 4, பூண்டு – 3 பல், உப்பு, தக்காளி, மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து 3 விசில் விட்டு இறக்கவும்.

விசில் போனதும் குக்கரின் மூடியை திறந்து பருப்பை நன்கு மசிக்கவும்.

இப்போது ஒரு மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய், பச்சை மிளகாய், சீரகம், சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு பேஸ்ட் போல் அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

இதனை அடுத்து அதே கடையை அடுப்பில் வைத்து அதில் அவித்து மசித்து வைத்த பருப்பை ஊற்றி இரண்டு நிமிடம் கொதிக்க விடுங்கள்.

பிறகு அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க விடுங்கள். இதில் தேவையான அளவு உப்பையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

மசாலாவின் பச்சை வாசனை போன பிறகு அதை அடுப்பில் இருந்து இறக்கி விடுங்கள்.

FINAL TOUCH:
அடுத்து மற்றொரு கடைய அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கருவேப்பிலை, வரமிளகாய் ஆகியவற்றை சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள்.

பிறகு வெட்டி வைத்த வெங்காயத்தையும் இதனுடன் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் இதனை அப்படியே பருப்பில் ஊற்றி விடுங்கள்.

இதனுடன் சிறிதளவு நெய்யும் சேர்த்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் ருசியான கேரளா ஸ்டைல் பருப்பு குழம்பு தயார்.



Post a Comment

Previous Post Next Post