மீல் மேக்கர் கிரேவி || MEAL MAKER GRAVY

1 கப் மீல் மேக்கர் இருந்தா ஒரு டைம் இப்படி கிரேவியை ட்ரை பண்ணுங்க.. by AMMA SAMAYAL
மீல் மேக்கர் கிரேவி
மீல்மேக்கர் கிரேவி, நெய் சாதத்திற்கு மட்டுமின்றி குஸ்கா, சூடான வெள்ளை சாதம், சப்பாத்தி, பூரி ஆகியவற்றுடனும் வைத்து சாப்பிடலாம்.

மீல் மேக்கர் கிரேவி:
செய்ய தேவையான பொருட்கள்:
மீல் மேக்கர் 1 கப்
அன்னாசிப்பூ 1
எண்ணெய் 2 tbsp
பட்டை 2 துண்டு
பிரியாணி இலை 2
பெரிய வெங்காயம் 2 (பொடியாக நறுக்கியது)
பெரிய தக்காளி - 1
உப்பு சுவைக்கேற்ப
மிளகாய் தூள் 1 tsp
மல்லித் தூள் 1 tsp
சீரகத் தூள் 1/4 tsp
கரம் மசாலா 1/2 tsp
தண்ணீர் 1 1/2 டம்ளர்
கொத்தமல்லி சிறிது

அரைப்பதற்கு...
தேங்காய் 1 சில்லு
இஞ்சி 1 துண்டு
பூண்டு 7-8 பல்
கிராம்பு 3
கல்பாசி சிறிது
சோம்பு 1 tsp
தண்ணீர் சிறிது

செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி நன்கு கொதிக்க வைத்து இறக்கி, அந்நீரில் 1 கப் மீல் மேக்கரை சேர்த்து மூடி வைத்து 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

பின்னர் மிக்சர் ஜாரில் தேங்காய், இஞ்சி, பூண்டு, கிராம்பு, கல்பாசி, சோம்பு மற்றும் சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். நீரை அதிகம் ஊற்றிவிட வேண்டாம்.

10 நிமிடம் ஆன பின், மீல் மேக்கரில் உள்ள நீரை வடிகட்டிவிட்டு, அதில் உள்ள அதிகப்படியான நீரை பிழிந்து வெளியேற்றிவிட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். மீல் மேக்கர் பெரியதாக இருப்பதை உணர்ந்தால், அவற்றை நறுக்கிக் கொள்ளுங்கள்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அன்னாசிப்பூ, பட்டை, பிரியாணி இலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின் சோம்பை சேர்த்து தாளித்து, வெங்காயத்தைப் போட்டு நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.

பிறகு அதில் தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி, தக்காளி நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.

பின் மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத் தூள், கரம் மசாலா சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.

அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து 2 நிமிடம் நன்கு கிளறி, பின் 1 1/2 கப் நீரை ஊற்றி நன்கு கிளறி விட்டு, கிரேவியை கொதிக்க வைக்க வேண்டும்.

கிரேவியில் இருந்து நீர் கொதிக்க ஆரம்பித்ததும், மீல் மேக்கரை சேர்த்து கிளறி, குறைவான தீயில் வைத்து 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, மேலே கொத்தமல்லியைத் தூவினால், சுவையான மீல் மேக்கர் கிரேவி தயார்.

TIPS:
இந்த மீல் மேக்கர் கிரேவியில், வெங்காயம் தக்காளி வெந்து மசாலா உப்பு எல்லாம் போட்டவுடன் கொஞ்சம் தயிர் சேர்த்தால் சுவை கூடும். தயிர் ஒரு நல்ல அமைப்பையும் சுவையையும் தருகிறது.

இந்த மீல் மேக்கர் கிரேவியை சப்பாத்தி, நாண், ரொட்டி, புலாவ், பூரி மற்றும் வெள்ளை சாதம் ஆகியவற்றுடன் ஒரு சிறந்த சைட் டிஷ் ஆகும்.



Post a Comment

Previous Post Next Post