பூண்டு குழம்பு

சுவையான பூண்டு குழம்பு எப்படி செய்வது...? || Garlic Kuzhambu செஞ்சு பாருங்க: தமிழ் கிராமத்து பூண்டு குழம்பு ரெசிபி - AMMA SAMAYAL
பிரமாதமான பூண்டு குழம்பு இப்பவே செய்ங்க 👌
Poondu kulambu recipe in tamil | Garlic Gravy | Poondu Kozhambu in Tamil:

பூண்டு குழம்பு:
தேவையான பொருட்கள்:
கடுகு 1 ts.
உளுந்து 1/2 ts.
வெந்தயம் 1/4 ts.
வெங்காயம் (லேசாக தட்டியது) 10 - 15 Nos.
பெரிய பூண்டு உரித்தது 2 Nos.
கறிவேப்பில்லை
மிளகாய் தூள் 2 tb.
மல்லித்தூள் 1/2 tb.
மஞ்சள் தூள் 1 சிட்டிகை
புளி கரைசல் (1 சிறிய நெல்லிகாய் அளவு)
வெல்லம் 1/2 ts.
அரைத்த மசாலா பேஸ்ட்

மசாலா பேஸ்ட் :
தேவையான பொருட்கள்
எண்ணெய் 1 tsb.
பூண்டு பள்ளு 1 கை
சீரகம் 1 ts.
மிளகு 1 ts.
வெந்தயம் 1/2 ts.
வெங்காயம் 5 - 6 Nos.
கருவேப்பில்லை
தக்காளி 1

[Note : ts. - teaspoon & tbs. - tablespoon]

மசாலா பேஸ்ட் செய்முறை :

வாணலில் 1 tsp. எண்ணெய் ஊற்றி

ஒரு கைப்பிடி பூண்டு, 1 tsp. சீரகம், 1 tsp மிளகு, 1/4 tsp வெந்தயம், 5-6 வெங்காயம், கருவேப்பில்லை, ஒரு தக்காளி சேர்த்து வதக்கவும் (அடுப்பு தீ கம்மியாக வைத்து சமைக்கவும்)

நன்கு வதங்கியவுடன் அடுப்பை அனைத்து சூடு தணிந்ததும் மிக்சியில் போட்டு அரைத்து தனியாக எடுத்து கொள்ளவும் (தண்ணீர் சேர்க்க வேண்டாம்).

குழம்பு செய்முறை :

குழம்பு செய்ய, வாணலில் 3 tb. எண்ணெய் ஊற்றி

1 ts கடுகு சேர்த்து வெடித்தவுடன், ½ ts உளுந்து, ¼ ts வெந்தயம்
ஒரு கொத்து கருவேப்பில்லை

பின், 10-15 வெங்காயம் (தட்டியது)
2 பெரிய அளவு பூண்டு (உரித்தது) சேர்த்து கொள்ளவும்.

உப்பு தேவையான அளவு சேர்த்து வதக்கவும்.

பின் 2 tb மிளகாய் தூள், ½ tb மல்லித்தூள், ஒரு சிட்டிகை அளவு மஞ்சள் தூள் சேர்த்து சிறிது வதங்கியவுடன் அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து எண்ணெய் திரியும் வரை வதக்கவும்.

புளி கரைசல் (ஒரு நெல்லிக்காய் அளவு) சேர்க்கவும்.

½ ts வெல்லம் (ருசி கூட்டுவதற்கு) சேர்த்துக்கொள்ளவும்.

புளிக்கரைசலை ஊற்றி 5 நிமிடங்கள் கொதிக்க விடவும். அடுப்பை குறைந்த தீயிலேயே வைத்து குழம்பு திக்காக ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விட்டு இறக்கவும்.

எண்ணெய் திரிந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கி பரிமாறவும்.

சுவையான பூண்டு குழம்பு தயார்.

பூண்டின் நன்மைகள்:

இது இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது, இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது.

பூண்டு இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது, ஒட்டுமொத்த இதய செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

இந்த விளைவுகள் அல்லிசின் போன்ற கலவைகளால் ஏற்படுகின்றன, இது பச்சை பூண்டில் அதிக சக்தி வாய்ந்தது.



Post a Comment

Previous Post Next Post