சாம்பார் செய்வது எப்படி? சாம்பார் | Quick Sambar Recipe

Sambar Recipe | Sambar | முருங்கைக்காய் சாம்பார் | சாம்பார் குழம்பு - by AMMA SAMAYAL
மூன்று நேர உணவின் போதும் உண்ணத்தக்க ஒரு குழம்பு வகைதான் சாம்பார். சாம்பார் குழம்பை வேகமாகவும் சுவையாகவும் எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.
நான்கு பேருக்கான அளவில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சாம்பார் குழம்பு
செய்ய தேவையான பொருள்
துவரம் பருப்பு 1/2 கப்
பெரிய வெங்காயம் 1
சின்ன வெங்காயம் 4
தக்காளி 1
பூண்டு 3 பல்
கருவேப்பிலை சிறிதளவு
சாம்பார் பொடி 2 TBSP
உப்பு தேவையான அளவு
பீன்ஸ் 3-4 Nos
மஞ்சள் தூள் 1/4 tsp
பெருங்காயம் 1/2 TSP
கொத்தமல்லி இலை சிறிதளவு
கடுகு 1/2 TSP
எண்ணெய்
முருங்கைக்காய் 2
கேரட்
(Medium size)
1
உருளை கிழங்கு 1
புளி - ஒரு சிறிய எலுமிச்சை அளவு
கத்தரிக்காய் விருப்பத்திற்குரியது
தேங்காய் துருவியது
விருப்பத்திற்குரியது

சாம்பார் செய்முறை:

ஒரு பிரஷர் குக்கரில் துவரம் பருப்பு 1/2 கப், 2 சின்ன வெங்காயம், 3 பல் பூண்டு ஆகியவற்றை போட்டு அதில் 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி வேகவைக்க வேண்டும். 5 முதல் 6 விசில் வரை நன்கு வேக விடமும்.

இப்போது மற்றொரு பாத்திரத்தில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி அது நன்கு காய்ந்ததும், அதில் கடுகு மற்றும் கருவேப்பிலை போட்டு தாளிக்கவும். பிறகு அதில் 1 முதல் 2 உடைந்த காய்ந்த சிவப்பு மிளகாய், 2 சின்ன வெங்காயம், நறுக்கிய 1 பெரிய வெங்காயத்தை போட்டு வதக்கவும். பிறகு அதோடு காயையும்(உருளை கிழங்கு, கேரட், பீன்ஸ், முருங்கைக்காய், கத்தரிக்காய்) சேர்த்து வதக்கவும்.

நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும். அதில் சாம்பார் பொடி, உப்பு, பெருங்காயப்பொடி, மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கவும்.

இந்த கலவையில் ஊறவைத்த புளியை பிழிந்து சாம்பாருக்கு புளி தண்ணீரை ஊற்றவும். கூழ் நீக்க புளியை வடிகட்டி சேர்க்கவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.பருப்பு நன்கு வேகுவதற்குள் இந்த கலவையும் நன்கு கொதித்துவிடும்.

பிறகு பருப்பு உள்ள குக்கரை திறந்து அதில் உள்ள பருப்பை நன்கு மசித்து சேர்க்கவும். இந்த கலவையை 2 முதல் 3 நிமிடங்கள் மீண்டும் கொதிக்கவிடமும்.

கடைசியாக, சிறிது துருவிய தேங்காய் விருப்பப்பட்டால் சேர்த்துக்கொள்ளவும், பின் நறுக்கிய கொத்தமல்லியை போட்டு நன்றாக கலக்கி சாம்பாரை அடுப்பில் இருந்து இறக்கவும்.

SPECIAL TIPS :

காய்கறிகளின் சரியான கலவையும் முக்கியம். உங்களுக்கு விருப்பமான காய்கறிகளைப் பயன்படுத்தவும். கத்தரி, சுரைக்காய் மற்றும் வெள்ளரிக்காய் போன்ற காய்கறிகள் உணவின் சுவையை மாற்றும். எனவே உங்கள் சுவைக்கு ஏற்ற காய்கறிகளைப் பயன்படுத்துங்கள். நான் பொதுவாக அவற்றில் எதையும் சேர்ப்பதில்லை.

முள்ளங்கியை சிலர் சேர்ப்பார்கள். விருப்பம் இருந்தால் சேர்த்துக்கொள்ளவும்

சிறிது தேங்காய் துருவலை கடைசியாக சேர்ப்பது உங்கள் விருப்பம் கட்டாயம் இல்லை. தேங்காய் துருவலை சேர்த்தால் குழம்பு கெட்டியாகவும் சுவையாகவும் இருக்கும்.



Post a Comment

Previous Post Next Post