சுவையான எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு இப்படி செய்து பாருங்க!

Ennai Kathirikai Recipe | Kathirikai Puli Kulambu | brinjal curry by AMMA SAMAYAL
சுவையான எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு இப்படி செய்து பாருங்க!
கத்திரிக்காய் பிடிக்காதவர்கள் கூட எண்ணெய் கத்திரிக்காய் குழம்பை விரும்பி சாப்பிடுவார்கள்.

கத்திரிக்காய் உடல்நலத்திற்கு தேவையான பல சத்துகளை தன்னுள் கொண்டுள்ளது. இதில் வைட்டமின் சி, ஈ சத்துகள், இரும்புசத்து, பாஸ்பரஸ் போன்ற பல சத்துகள் உள்ளது. சிலருக்கு கத்திரிக்காய் பிடிக்காது. ஆனால் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு அனைவராலும் விரும்பி உண்ணப்படும். தற்போது சுலபமான எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு எப்படி செய்வது என பார்க்கலாம்.

எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு செய்ய:
தேவையான பொருட்கள்:
கத்தரிக்காய் 8
சின்ன வெங்காயம் 10
பெரிய வெங்காயம் 2
தக்காளி 2
தேங்காய் துருவல் அரை கப்
இஞ்சி 1 துண்டு
பூண்டு 4 பல்
கடுகு 1/4 ஸ்பூன்
வெந்தயம் 1/4 ஸ்பூன்
மிளகாய் பொடி 2 ஸ்பூன்
தனியா பொடி 1 ஸ்பூன்
மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்
சீரகம், சோம்பு 1 ஸ்பூன்
புளி தண்ணீர் 1 கப்
காய்ந்த மிளகாய் 2
நல்லெண்ணெய் 1 குழிக்கரண்டி
கறிவேப்பிலை 1 கீற்று
கொத்தமல்லி தேவையான அளவு
உப்பு தேவையான அளவு


செய்முறை:
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

நன்கு வதங்கியதும் அதனுடன் இஞ்சி, பூண்டு தட்டி சேர்க்கவும். பிறகு அதில் அரை ஸ்பூன் மஞ்சள்தூள், மல்லித்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து கலக்கவும். பின்பு அதில் தக்காளி சேர்த்து வதக்கி தனியாக எடுத்து ஆற வைக்கவும்.

பின்பு அதை மிக்சி ஜாரில் மாற்றி அதனோடு தேங்காய் துருவல், சோம்பு, சீரகம் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். தற்போது மசாலா ரெடி.

பிறகு கத்திரிக்காய் எடுத்து முழுவதுமாக வெட்டாமல் எக்ஸ் வடிவில் வெட்டி கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கத்திரிக்காய் சேர்த்து நன்கு வதக்கி தனியாக எடுத்து வைக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய் , கறிவேப்பில்லை சேர்த்து வதக்கவும். பிறகு அதில் சின்னவெங்காயம் சேர்த்து வதக்கவும்.

இதோடு அரைத்த மசாலா சேர்த்து நன்றாக கலந்து மூடி வைத்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வேக வைக்கவும்.

இப்போது இதில் புளி தண்ணீர் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

பிறகு அதில் பொறித்த கத்திரிக்காய் சேர்த்து லேசாக வதக்கி மூடி போட்டு 5 நிமிடம் மிதமான சூட்டில் மூடி வைக்க வேண்டும். இறுதியாக கொத்தமல்லி தூவி இறக்கவும்.

ரொம்ப டேஸ்டியான எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு ரெடி..


Post a Comment

Previous Post Next Post