சுவையான வெண்டைக்காய் புளி குழம்பு செய்முறை

Vendakkai Puli Kuzhambu Recipe || How to Make வெண்டைக்காய் புளி குழம்பு || by AMMA SAMAYAL
சுவையான வெண்டைக்காய் புளிக்குழம்பு செய்வது எப்படி:
உங்கள் வீட்டில் வெண்டைக்காய் இருந்தால் அதை வைத்து காரசாரமான சுவையில் வெண்டைக்காய் புளிக்குழம்பு செய்து சாப்பிடுங்கள். ஒருமுறை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுங்கள். அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

வெண்டைக்காய் புளிக்குழம்பு:

தேவையான பொருட்கள்:
வெண்டைக்காய் 1/4 kg
சின்ன வெங்காயம் 50 கிராம் (பொடியாக நறுக்கியது)
தக்காளி 1 (பொடியாக நறுக்கியது)
காயந்த மிளகாய் 2
புளி சிறிதளவு
வெந்தயம் சிறிதளவு
கடுகு 1 ஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
குழம்பு மிளகாய் தூள் 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
நல்லெண்ணெய் தேவையான அளவு
தண்ணீர் தேவையான அளவு


செய்முறை:
முதலில் எடுத்து வைத்த வெண்டைக்காயை வட்டமாக நறுக்கிக் கொள்ளுங்கள்.

இப்போது அடுப்பில் ஒரு கடையை வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, பின் வெண்டைக்காயை அதில் சேர்த்து, சுமார் இரண்டு நிமிடம் வதக்கி, பின் அதை ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது அதே கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கருவேப்பிலை, காய்ந்த மிளகாய், வெந்தயம் ஆகியவற்றை போட்டு தாளிக்கவும்.

பிறகு அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் அதில் தக்காளியும் சேர்த்து நன்கு வதக்கவும்.

தக்காளி மசிந்தவுடன் அதில் புளி கரைசல், உப்பு, குழம்பு மிளகாய் பொடி, மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.

பின் இதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள். தண்ணீர் நன்கு கொதித்தவுடன் அதில் வேக வைத்துள்ள வெண்டைக்காயை சேர்க்கவும்.

குழம்பில் எண்ணெய் பிரிந்து வந்தவுடன் அடுப்பு அணைத்து விடுங்கள்.
அவ்வளவுதான் காரசாரமான சுவையில் வெண்டைக்காய் புளிக்குழம்பு ரெடி. சூடான சாதத்திற்கு இந்த குழம்பு ஊத்தி சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும்.

வெண்டைக்காயின் ஏராளமான நன்மைகள்:
வெண்டைக்காய் ஊறவைத்த தண்ணீருக்கு இவ்வளவு மகத்துவமா?

வெண்டைக்காய் வழவழப்புத்தன்மை கொண்டது என்பதால், அது பலருக்கும் பிடிக்காத ஒரு காயாக இருக்கிறது. அதிலுள்ள பெக்டின் (Pectin) மற்றும் கோந்துத்தன்மையே இந்த வழவழப்புக்குக் காரணம். பெக்டின் மற்றும் கோந்துப்பொருள் கரையும் நார்ச்சத்து நிறைந்தது என்பதால், ரத்தத்தில் கொழுப்பு மற்றும் பித்த நீர் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளும். கொலஸ்ட்ராலைக் குறைத்து மாரடைப்பு வராமல் தடுக்கும். பெருங்குடலின் உள்பகுதியில் படிந்து பெருங்குடல் சிறப்பாகச் செயல்படவும் உதவும். ஆனால், உணவு செரிமானத்துக்குப் பிறகு, இது கரையா நார்ச்சத்தாக மாறுவதால் குடலைப் பாதுகாப்பதுடன் மலக்குடலில் வரும் புற்றுநோயைத் தடுக்கவும் உதவும்.

இரவு தூங்கச் செல்வதற்கு முன் ஒரு டம்ளர் நீரில் வெண்டைக்காயைச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிப் போட்டு இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலை எழுந்ததும் அந்த நீரைப் பருகுவதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் தினமும் இந்த நீரை அருந்துவதால் ரத்தச் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். நீர்ச்சத்து, நார்ச்சத்து நிறைந்த இந்தத் திரவத்தை அருந்தினால் நீரிழப்பு தடுக்கப்படுவதுடன் உடல் குளுமை பெறும். எலும்புகள் வலிமை பெற்று ஆஸ்டியோபோரோசிஸ் (Osteoporosis) வராமல் தடுக்கப்படும். எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்க நினைப்பவர்கள் தினமும் இந்த வெண்டைக்காய் ஊறிய நீரை அருந்துவது நல்லது.

வெண்டைக்காயில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின் சி நிறைந்துள்ளன. எனவே, இந்த நீரை அருந்தி வந்தால் நோய் எதிர்ப்பு மண்டலம் வலிமையடையும். முற்றிய வெண்டைக்காயைச் சூப் செய்து அருந்தினால் சளி, இருமல் குணமாகும். முற்றிய வெண்டைக்காய் மூன்று, ஒரு தக்காளி, பூண்டுப்பல் மூன்று, சின்ன வெங்காயம் இரண்டு, மிளகு ஐந்து, கால் டீஸ்பூன் சீரகம் சேர்த்து நீர் விட்டுக் கொதிக்க வைக்க வேண்டும். பாதியாக வற்றியதும் அடுப்பிலிருந்து கீழே இறக்கி உப்பு சேர்த்துக் குடித்தால் சளித்தொல்லைகளிலிருந்து நிவாரணம் பெறலாம்.

சுவாசம் தொடர்பான பிரச்னை உள்ளவர்கள் வெண்டைக்காய் ஊறிய நீர் அருந்துவது நல்லது. குறிப்பாக ஆஸ்துமா கோளாறு சரியாகும். வெண்டைக்காயைப் பால் சேர்த்து வேக வைத்தும் குடிக்கலாம். பிஞ்சு வெண்டைக்காயை வேகவைத்து எடுத்த நீருடன் சர்க்கரைச் சேர்த்துக் குடித்தால் இருமல், நீர்க்கடுப்பு, வெள்ளைப்படுதல் சரியாகும். வெண்டைக்காயைப் பச்சையாக மென்று சாப்பிட்டால் பற்கள் தூய்மை பெறுவதுடன் ஈறுகளில் ரத்த ஓட்டம் தூண்டப்படும்; ஈறு தொடர்பான நோய்கள் சரியாகும். மலச்சிக்கலும் தீரும்.

வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொண்டால் பார்வை மேம்படும்.

வெண்டைக்காயில் ஆக்சலேட் அதிகமுள்ளது. இது சிறுநீரகம், பித்தப்பைக் கற்களை வளரச் செய்துவிடும். கல் பிரச்னையுள்ளவர்கள் வெண்டைக்காயைக் குறைவாகச் சாப்பிட வேண்டும். வெண்டைக்காயை அதிகமாக வதக்கினால் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கும். லேசாக வதங்கியதும் அடுப்பிலிருந்து இறக்கிவிட வேண்டும்'' என்கிறார் ஜீவா சேகர்.



Post a Comment

Previous Post Next Post